நீ யாரு எங்கள கேட்க.. தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க்கில் சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சம்யுக்தா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளிக்கு சுரங்கத்தில் இருந்து தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 23 | Samக்கு கோவம்லாம் வருமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு பொன்மகள் வந்தாள் பாடலுடன் தொடங்கியது.

அதற்கேற்றார் போலவே ஹவுஸ்மேட்டுகளுக்கு நாள் தோறும் கொடுக்கப்படும் டெய்லி டாஸ்க்காக தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

தங்கம் சேகரிக்க வேண்டும்

தங்கம் சேகரிக்க வேண்டும்

அதற்காக பிக்பாஸ் வீட்டில் பிரத்யேக தங்கச்சுரங்க அறை அமைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் 4 பேர் கொண்ட குழுக்கலாக பிரிந்து தங்கத்தை சேகரிக்க சொன்னார் பிக்பாஸ்.

4 பேர் குழுக்கள்

4 பேர் குழுக்கள்

அதன்படி ஹவுஸ்மேட்ஸ் அலாரம் ஒலிக்கும் போது உள்ளே போக வேண்டும், மீண்டும் அலாரம் ஒலித்தவுடன் வெளியே வரவேண்டும் என்பது விதி. அதன்படி பாலாஜி, சம்யுக்தா உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக தங்க சுரங்கத்துக்குள் சென்றனர்.

அதுதான் ரூல்

அதுதான் ரூல்

அப்போது, பாலாவை துணியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றதை பார்த்த சனம் ஷெட்டி அவரை அழைத்து இதையெல்லாம் எடுத்துக்கொண்டு உள்ளே போகக்கூடாது என்றார். அதுதான் ரூல் என்றும் கூறினார்.

ஃபேர் இல்லை பாலா

ஃபேர் இல்லை பாலா

ஆனால் அதையெல்லாம் கேட்காமல் உள்ளே சென்றனர் பாலாஜி மற்றும் அவரது குழுவினர். அதன்பிறகு வெளியே வந்த பாலாஜி, நீ ஏன் என்னை தடுத்தாய் என சனம் ஷெட்டியிடம் கேட்டார். அதற்கு இது ஃபேர் இல்லை பாலா என்றார்.

நீ செய்தால் சரி..

நீ செய்தால் சரி..

தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி, ரூலில் அதில் இல்லை என்றார். அப்போது நீ மட்டும் இதையெல்லாம் எடுத்து போகிறாய் என அவர் கையில் இருந்த கூடையை குறிப்பிட்டார். மேலும் நீங்கள் செய்தால் சரி மற்றவர்கள் செய்தால் தவறா என ஆர்க்யூ செய்தார் பாலா.

நீ யார் எங்களை கேட்க?

நீ யார் எங்களை கேட்க?

தொடர்ந்து பேசிய சம்யுக்தா, நீ யார் எங்களை சொல்ல? நீயும் போட்டியாளர்தானே? ஏன் எங்களை சொல்கிறாய். என்ன நடந்தாலும் அதில் நீ பேச வேண்டும். அதில் நீ தலையிட வேண்டும் என சனம் ஷெட்டியை வெளுத்து வாங்கினார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாடா ஒரு வழியா சம்யுக்தா பேசிவிட்டார் என பெருமூச்சு விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X