இதுதான் திருடன்கிட்டேயே சாவிய கொடுக்றதா? பிக்பாஸின் புரமோவை பார்த்து தலையில் கைவைக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் தீபாவளி டாஸ்க்காக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பாட்டியாக அர்ச்சனா நடிப்பது முதல் புரமோவில் தெரியவந்தது.
சொத்துக்கு ஆசைப்பட்ட பிள்ளைகள் பண்டிகையை காரணமாக வைத்து சொந்த ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.

இளைய மகன் மருமகள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் சோம் அர்ச்சனாவின் இளையமகனாகவும் ரம்யா இளைய மருமகளாகவும் உள்ளனர்.

கூட்டாளி பேபி
அர்ச்சனாவின் சொத்து பத்திரம் உள்ள பெட்டியை திருடும் டாஸ்க்கை சோமுக்கும் ரம்யாவுக்கும் கொடுத்துள்ளார் பிக்பாஸ். அவர்களின் கூட்டாளியான கேபி, மகளாக நடிக்கிறார்.

பாதுகாக்கும் பணி
இதனை அறியாத அர்ச்சனா, சொத்து பத்திரம் உள்ள பெட்டியை பாதுகாக்கும் பணியை சோமிடமே கொடுக்கிறார். அதற்கு சோம் நாங்கள் மூன்று பேரும் மாறி மாறி பெட்டியை பார்த்து கொள்கிறோம் என்கின்றார்.

கோர்த்து விடுங்க..
இதனை பார்த்த நெட்டிசன்கள், திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது இதுதான் போல என கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், ஏற்கனவே ரம்யாவுக்கும் சோமுக்கும் இடையில் ஒரு ட்ராக் போகிறது. இதில் இப்படி வேற கோர்த்து விடுகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.

எத்தனை கொடுத்திருக்கீங்க?
இன்னும் சிலர் இது பேரு டாஸ்க்காடா? எத்தனை படத்தில காட்டியிருக்காங்க? நீங்களே உங்களோட ஒவ்வொரு சீசன்லேயும் இந்த மாதிரி எதையாவது திருட வைக்கும் டாஸ்க் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











