'அவர் படத்தில் நடிக்கணும்ங்கிறது என்னோட கனவு' - யாரைச் சொல்கிறார் பிக்பாஸ் ஹரீஷ்?

By Vignesh Selvaraj

Recommended Video

பிக்பாஸ் ஹரீஷுக்கு இப்படி ஒரு ஆசையா?-வீடியோ

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து நடிக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனது கனவு நிறைவேறிவிட்டது எனக் கூறியுள்ளார் ஹரீஷ்.

கமல்ஹாசன் நடத்திய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது.

ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். ஜூலி கலைஞர் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகக் களமிறங்கிவிட்டார்.

புதிய படம்

புதிய படம்

இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யுவன் இசை

யுவன் இசை

ஹரீஷ் - ரைசா நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

எனது கனவு

தனது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதை பெருமையோடு பகிர்ந்துள்ளார் படத்தின் நாயகனாகியிருக்கும் ஹரீஷ். ரைசாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார் ஹரீஷ்.

வளர்ந்ததே யுவனின் இசை கேட்டுத்தான்

வளர்ந்ததே யுவனின் இசை கேட்டுத்தான்

'நான் யுவனின் இசையைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். அவரது இசையில் உருவாகும் படத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. இந்தக் கனவு இப்போது நனவாகி இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X