அதே இன்னும் எரியுது.. அதுக்குள்ள ஜோடி ஜோடியாய் சேர்த்துவிட்ட பிக்பாஸ்.. என்னல்லாம் நடக்க போகுதோ!
சென்னை: புதிய டாஸ்க்கை கொடுத்துள்ள பிக்பாஸ் எல்லோரையும் ஜோடி சேர்த்து விட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் எவிக்ஷனில் இருந்து தப்பிக்க நேற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கும் ஒருவருக்கு எவிக்ஷன் பாஸை பெறுவதற்காக ஒரு டாஸ்க்கை வழங்கினார்.
அப்போது பற்றிய நெருப்பே இன்னும் பிக்பாஸ் வீட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்புவதற்காக இன்று ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

சக்தி வாய்ந்தது
இதன் மூலம் போட்டியாளர்களை இரண்டிரண்டு பேராய் ஜோடி சேர்த்துவிட்டுள்ளார் பிக்பாஸ். இது ஹவுஸ்மேட்டுகளின் டெய்லி டாஸ்க் என்றும், இந்த டாஸ்க் போட்டியாளர்களை அடுத்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றக்கூடிய சக்திவாய்ந்தது.

வெளியேற்றலாம்
இதற்காக போட்டியாளர்கள், ஒருவரை கூட்டாளியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கார்டன் ஏரியாவில் உள்ள பவுலில் பந்து போட வேண்டும். பந்து போடும் போட்டியாளர் ஒரு ஹவுஸ்மேட்டை சரியான காரணத்தோடு வெளியேற்றலாம். கடைசியா நின்னு ஜெயிப்பவரும் அவரோடு கூட்டு வைத்த நபரும் அடுத்த வாரம் நாமினேஷன் செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாலஜி - சுரேஷ்
இதற்காக பாலாஜி முருகதஸும் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஜோடியாகியுள்ளனர். ரம்யா பாண்டியனும் ஆஜித்தும் ஒரு ஜோடியாய் பிரிந்துள்ளனர். ஆரி மற்றும் ஷிவானி ஒரு ஜோடியாகவும், நிஷா மற்றும் ரியோ ராஜ் ஒரு ஜோடியாகவும் பரிந்துள்ளனர்.
Recommended Video

இன்னும் எரிகிறது
கேப்ரியல்லா மற்றும் அனிதா ஒரு ஜோடியாகவும் பிரிந்துள்ளனர். நேற்று நடத்திய டாஸ்க்கின் காரணமாக பற்றிய தீயே இன்னும் பிக்பாஸ் வீட்டில் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். இது எதில் போய் முடியப் போகிறதோ என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











