இதுக்குமேல மொக்கையா டாஸ்க் கொடுக்க முடியாதுடா சாமி.. ரிவர்ஸ் டாஸ்க்கை பார்த்து திட்டும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ரிவர்ஸ் டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல மொக்கையாக டாஸ்க் கொடுக்க முடியாது என கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் முழுக்க தீபாவளி செலிபிரேஷன் என ஃபன் டாஸ்க்குகளை கொடுத்து கொண்டாட வைத்தார் பிக்பாஸ்.

எவிக்ஷனும் இல்லை என்பதால் ஹவுஸ்மெட்ஸ் செம ஜாலியாக இருந்தனர்.

கால் கடுக்க நிற்க வைத்து

கால் கடுக்க நிற்க வைத்து

இந்நிலையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கடிகார முள் டாஸ்க்கை கொடுத்து பெண்டை கழட்டி வருகிறார் பிக்பாஸ். வெயில் மழை என ஹவுஸ்மெட்ஸ்களை கால் கடுக்க நிற்க வைத்து நேரத்தை கணிக்க சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.

மொக்கை டாஸ்க்

மொக்கை டாஸ்க்

அந்த ஒரு டாஸ்க்குதான் உருப்படியாக உள்ளது. அதற்குள் கொடுக்கும் எந்த டாஸ்க்கும் சொல்லும் படியாக இல்லை. சுண்டல் விற்பது, டீ விற்பது, குல்ஃபி விற்பது, சுக்கு காஃபி விற்பது என மொக்கையாக டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார்.

பார்க்கவே எரிச்சசல்

பார்க்கவே எரிச்சசல்

அந்த வகையில் நேற்று முன் தினம் ஜிப்ரிஷ் மொழியில் ஹவுஸ்மெட்ஸ்களை பேச வைத்து வெறுப்பேற்றினார். பலரும் ஜிப்ரிஷ் மொழியில் பேசும் டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது என கழுவி ஊற்றினர்.

ஒழுங்காக செய்யவில்லை

ஒழுங்காக செய்யவில்லை

இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் ஹவுஸ் மெட்ஸ்களை ரிவர்ஸில் நடக்க வைத்து ரசிகர்களை கடுப்பேற்றிவிட்டார். இதில் ஹவுஸ்மெட்ஸ் பின்னாலேயே நடப்பது டான்ஸ் ஆடுவது என ஒருத்தரும் ஒழுங்காக செய்யவில்லை.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
முடியலடா எப்பா..

முடியலடா எப்பா..

இந்த டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் இதைவிட மொக்கையாக டாஸ்க் கொடுக்கவே முடியாது என கழுவி ஊற்றியுள்ளனர். பிக்பாஸ் சீசன்லயே இந்த சீசன் 4 தான் ரொம்பவே மொக்கையாக இருப்பதாகவும் முடியலடா எப்பா என்றும் மூக்கை சிந்துகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X