ஃபினாலேவுக்கு நேரடியாக செலக்ட்டாக போகும் போட்டியாளர் யார்? டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ஃபினாலேவுக்கான டிக்கெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்றாவது முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது.
இரண்டாவது புரமோவில் ரியோ ஆரியை பற்றி குறைகளை அடுக்கினார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

டிக்கெட் டூ ஃபினாலே
அதன்படி இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக டிக்கெட் டூ ஃபினாலே என பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து போட்டிகளின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற்று டிக்கெட் டூ ஃபினாலேவை பெறும் நபர் இந்த எவிக்ஷன் புராசஸில் இருந்து தப்பித்து நேரடியாக பினாலே வாரத்திற்குள் நுழைந்து விடுவார் என அறிவிக்கப்படுகிறது.

தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்கள்
அவருக்கு அடுத்து வாக்கு எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் நபர் வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முதல் டாஸ்க்காக தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை கையில் பிடித்தப்படி நிற்கின்றனர் போட்டியாளர்கள்.

பாலாஜியும், ரியோவும்..
இதில் பலூன் பிடித்திருக்கும் கையை இறக்கினால், கீழே உள்ள ஆணி படுக்கையில் பட்டு பலூன்கள் உடைந்து விடும். இந்த டாஸ்க்கில் ஷிவானி, கேபி, ரம்யா, ஆரி, சோம் என அனைவரும் அவுட்டாக, பாலாஜியும் ரியோவும் மட்டும் கடைசி வரை தாக்குப்பிடிக்கின்றனர்.

ஆரியை வெளியேற்றவே..
இந்த டாஸ்க்கில் ஆரி அவுட்டானதை பார்த்த ரசிகர்கள், இந்த டாஸ்க்கை பிக்பாஸ் ஆரிக்கு என்றே கொடுத்துள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர். ஆரியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











