பிக்பாஸ் வீட்டை மூடர்கூடம் என விமர்சித்த இயக்குனர் நவீன்
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டை மூடர்கூடம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் பரபரப்பாக இல்லை என்பதை பலரும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிகழ்ச்சியில், தற்போது சென்றாயன் வெளியேற்றப்பட்டார். ஏமாற்று வேலைகள் செய்து ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள ஐஸ்வர்யா தத்தா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்பாவி சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.
ஓட்டுப்போடும் வாய்ப்பு இருந்தும் சென்றாயனைக் காப்பாற்ற பலர் ஓட்டுப்போடாததுதான் காரணம் என கமல் காரணம் சொன்னார். பிக்பாஸின் இந்த நடவடிக்கைக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எப்போதும் சமூகப் பிரச்சனைகளுக்கு முந்திக்கொண்டு கருத்துகளை பதிவிடும் இயக்குனர் நவீன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடியுள்ளார்.
"வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.
பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
கமல்ஹாசன் எனும் மிகப்பெரிய நடிகர் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, திரைத்துறையில் இருக்கும் நவீன், அவர் இயக்கிய மூடர்கூடம் திரைப்படத்தின் பெயரையே பிக்பாஸ் வீட்டுக்கு சூட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











