கமல் பிறந்த நாளுக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா? தந்தை குறித்த உருக்கமான சம்பவத்தை பகிர்ந்த கமல்!

சென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஸ்பெஷலாக கேக் தயாரித்து கமலை திணறடித்தனர்.

சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் கமல் பங்கேற்றார். இன்றைக்கு கமலின் பிறந்த நாள் என்பதால் நிகழ்ச்சி மேடையே வழக்கத்திற்கு மாறாக ஜொளித்தது.

கெத்தாக நடந்து வந்த கமலுக்கு பிக்பாஸ் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். கமல் சார் ட்ரீட் எங்கே என்றும் மிரட்டலாக கேட்டார் பிக்பாஸ்.

அதுதான் ட்ரீட்

அதுதான் ட்ரீட்

அதற்கு ட்ரீட்டா என ஆச்சரியத்துடன் கேட்ட கமல், நான் எல்லோரையும் சமமாகவும் மரியாதையாகவும் நடத்துவேன்.. அதையே எதிர்பாருங்கள்.. அதுதான் ட்ரீட் என பதில் அளித்ததார் கமல்.

மேடைக்கு வந்த கேக்

மேடைக்கு வந்த கேக்

தொடர்ந்து பேசிய பிக்பாஸ் கமல் சார் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று கூறி ஹவுஸ்மேட்ஸ் தயார் செய்த கேக்கை நிகழ்ச்சிக்கு மேடை பணியாளர் மூலம் அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

பிரியாணியும் உண்டு

பிரியாணியும் உண்டு

அதனை பார்த்த கமல் தனக்காக கேக் தயாரித்த ஹவுஸ்மெட்டுகளுக்கு நன்றி கூறினார். மேலும் இந்த கேக்கை உங்களுக்கே கொடுக்கிறேன், நீங்கள் சாப்பிட வேண்டும் என்றார் கமல். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் பிரியாணி வேண்டும் என்றனர். அதற்கு அதுவும் உண்டு என்றார் கமல்.

தகப்பானார் இறந்தார்..

தகப்பானார் இறந்தார்..

தொடர்ந்து பேசிய கமல், என் பிறந்த நாளில்தான் என் தகப்பானார் இறந்தார். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நான் என் பிறந்தநாளை கொண்டாடும்படி நான் என்ன செய்திருக்கிறேன். சினிமாவில் நடித்து நடிகனாக உள்ளேன், அதற்கு சம்பளம் கொடுத்தார்கள். போனஸாக உங்களின் அன்பு கிடைத்தது என்றார்.

கமல் ஹிட்ஸ்..

கமல் ஹிட்ஸ்..

தொடர்ந்து அகம் டிவி வழியாக ஹவுஸ்மெட்டுகளும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கமலின் பல்வேறு ஹிட் பாடல்களான, இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி, ராஜா கையா வச்சா.. உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்ல.. உலகநாயகனே உள்ளிட்ட பாடல்களை கோரஸாக பாடி அசத்தினர்.

ஃபேமஸ் டயலாக்ஸ்

ஃபேமஸ் டயலாக்ஸ்

இடை இடையே கமலின் ஃபேமஸ் டயலாக்குகளையும் பேசி அசத்தினர். ஹவுஸ்மெட்டுகளின் அந்த மெட்லி பர்ஃபாமன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறினர் ஹவுஸ்மேட்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X