வாடா போடன்னு பேசிய சனம் ஷெட்டி.. பச்சைக் குழந்தை மாதிரி கேவி கேவி அழுத மொட்டை சுரேஷ்!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி தேம்பி தேம்பி அழுத புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கலங்கிவிட்டனர்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் நாடா இல்ல காடா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் அரக்கக் குடும்பமாகவும் அரச குடும்பமாகவும் உள்ளனர்.
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, அவன் இவன் என்றும் போடா வாடா என்றும் கடுமையான வார்த்தைகளால் சுரேஷ் சக்கரவர்த்தியை திட்டினார்.

அந்தாளு கொடுப்பானா?
அரசராக இருந்த சுரேஷ், மறைத்திருந்த துணியை தனது செங்கோலால் விலக்க முயன்றார். அப்போது, அந்த செங்கோல் சனம் ஷெட்டியின் முகத்தில் பட்டது. இதனால் கடுப்பான சனம் ஷெட்டி, இன்னும் ஒரு இன்ச் கீழே பட்டிருந்தால் என் கண்ணு போயிருக்கும் அந்தாளு கொடுப்பானா?

போடா வாடா என ஏக வசனம்
என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்தாளு? என கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் பேசினார். மேலும் எனக்கும் மனசு இருக்கு.. ஏய் நீ வெளியே வாடா இப்போ என சுரேஷ் சக்கரவர்த்தியை மரியாதையே இல்லாமல் அழைத்தார் சனம் ஷெட்டி.

கதறிய சுரேஷ் சக்கரவர்த்தி
இதனால் மனம் நொந்து போன சுரேஷ் சக்கரவர்த்தி, பிக்பாஸிடம் கன்ஃபெஷன் ரூமுக்கு அழையுங்கள் என்றார். இதனை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து தெரிந்துதான் செய்தீர்களா என கேட்க, சத்தியமா இல்ல பிக்பாஸ் என கதறி அழுகிறார்.

அனிதா சம்பத்
எல்லோரும் தன்னை கார்னர் செய்வதாகவும் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஏற்கனவே அனிதா சம்பத் அவரை கார்னர் செய்தார். நீ போ என மரியாதையே இல்லாமல் பேசினார். இதனால் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரூடாக பேசிய ரியோ
இதேபோல் ரியோவும், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசி வருகிறார். ஃபேஷன் ஷோ டாஸ்க்கின் போது எடுத்துக்காட்டாய் கூற வந்தபோது அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காமல், என்னை பற்றி பேசக்கூடாது என ரொம்பவே ரூடாக பேசினார்.

அவமானப்படுத்தும் ரியோ
அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் கேம் விளையாடுவதில் தவறு ஏதாவது இருந்திருந்தால், பிக்பாஸ் கூப்பிட்டு சொல்லியிருப்பார் என்றார் சுரேஷ் சக்கவர்த்தி. அப்போது, வாட் சார் வாட் சார் என மிரட்டும் தொனியில் கேட்ட ரியோ, வேற வேலையே இல்லையா அவருக்கு நீங்க ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பீங்க அவரு வந்துட்டே இருப்பாரா என கேவலமான பாடி லாங்குவேஜூடன் கேட்டார்.

அசிங்கப்படுத்தும் அனிதா
தொடர்ந்து சனம் ஷெட்டியும் பாத்ரூம் கழுவ முடியும் துணி துவைக்க முடியாதா என கேட்டு வம்பிழுத்தார். நேற்றைய எபிசோடில் அனிதாவும் பல முறை அவரை அவமதிக்கும் வகையில் அரக்க கூட்ட தலைவருக்கு அறிவேயில்லை என்று நோகடிக்கும் வகையில் பேசினார். அதைக்கூட கண்டும் காணாமல் கடந்துவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்
பாலாஜி முருகதாஸ், ஆரி, ரியோ, சனம் ஷெட்டி, அனிதா சம்பத், வேல்முருகன் என பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை கார்னர் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிராக குரூப்பிஸம் உள்ளது. பலரும் அவரை அவமதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











