குட் டே ஹேப்பினஸ் அவார்டுஸ்.. யார் யாருக்கு என்னென்ன அவார்டு.. பாலாஜிக்கு கொடுத்த அவார்ட பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் குட்டே ஹேப்பினஸ் அவார்டுஸ் என ஹவுஸ்மேட்ஸ்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஏதாவது ஒரு புராடெக்ட்டை விளம்பரப்படுத்தும் வகையில் ஹவுஸ்மேட்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

நெய், ஆஷிர்வாத் ஆட்டா, டூ வீலர், கார், வசந்த் அன்ட் கோ, டாபர் ஹெர்பல் பேஸ்ட் என பல விளம்பரதாரர்கள் சார்பில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

விருது விழா

விருது விழா

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் குட் டே பிஸ்கெட் சார்பில் பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் கார்டன் ஏரியாவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வீலை சுற்றி விருது

வீலை சுற்றி விருது

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கேபி விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த, வீலை ஒவ்வொரு போட்டியாளராக சுற்ற வேண்டும். அதில் வரும் போட்டியாளருக்கு மற்றொரு போட்டியாளர் அவார்டு கொடுக்க வேண்டும்.

அன்பின் உருவம்

அன்பின் உருவம்

அதன்படி முதல் நபராய் ஆஜித்தை அழைத்து வீலை சுற்றுமாறு கூறினார் கேபி. அதில் அர்ச்சனா முகம் வர, அவருக்கு அன்பின் உருவம் என்ற அவார்டை கொடுத்தார் ஆஜித். அதனை தொடர்ந்து வீலை சுற்றிய அர்ச்சனாவுக்கு ஆஜித்தின் முகம் வர அவருக்கு தங்கமானவன் என்ற அவார்டை கொடுத்தார்.

நண்பேண்டா

நண்பேண்டா

அவருக்கு அடுத்தப்படியாக வீலை சுற்றிய பாலாஜிக்கு அனிதாவின் முகம் வர அவருக்கு மிகவும் நம்பகமானவர் என்ற விருதை கொடுத்தார். தொடர்ந்து வீலை சுற்றி அனிதாவுக்கு ரியோவின் முகம் வந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு
நண்பேண்டா விருது கொடுத்தார் அனிதா.

மிகவும் அன்புடையவர்

மிகவும் அன்புடையவர்

விருதை பெற்று வீலை சுற்றினார் ரியோ, அதில் ஷிவானியின் முகம் வந்தது, இதனை தொடர்ந்து அவருக்கு புன்னகை அரசி விருதை கொடுத்தார். ஷிவானி வீலை சுற்றியபோது, சோமின் முகம் வந்தது, இதையடுத்து அவருக்கு மிகவும் அன்புடையவர் என்ற விருதை கொடுத்தார் ஷிவானி.

மிகவும் அக்கறையுடையவர்

மிகவும் அக்கறையுடையவர்

சோம் வீலை சுற்றிய போது அவருக்கு ஆரி வந்தார். அவருக்கு எல்லாவற்றிலும் நன்மை காண்பவர் என்ற விருதை வழங்கினார் சோம். ஆரி வீலை சுற்றிய போது அவருக்கு சனம் ஷெட்டியின் முகம் வந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு மிகவும் அக்கறையுடையவர் என்ற அவார்டை வழங்கினார் ஆரி.

எப்போது நேர்மறையானவர்

எப்போது நேர்மறையானவர்

சனம் ஷெட்டி வீலை சுற்றிய போது ஜித்தன் ரமேஷின் படம் வந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அனைவரின் நண்பன் என்ற அவார்டை வழங்கினார் சனம் ஷெட்டி. ஜித்தன் ரமேஷ் வீலை சுற்றிய போது, பாலாஜியின் முகம் வர, அவருக்கு எப்போதும் நேர்மறையானவர் என்ற விருதை வழங்கினார் ரமேஷ்.

மிகவும் குதூகலமானவர்

மிகவும் குதூகலமானவர்

தொடர்ந் வீலைசுற்றினார் கேபி, அவருக்கு நிஷாவின் படம் வர, குஷி நாயகி என்ற அவார்டை வழங்கினார். நிஷாவுக்கு ரம்யாவின் படம் வர அவருக்கு மிகவும் குதூகலமானவர் என்ற விருதை வழங்கினார் நிஷா, விருது வரிசையில் கடைசியாக கேபியின் படம் வர அவருக்கு மிகவும் உற்சாகமானவர் என்ற விருதை வழங்கினார் ரம்யா.

மகிழ்ச்சியின் தூதுவர்

மகிழ்ச்சியின் தூதுவர்

பின்னர் குட்டே பிஸ்கேட்டின் ஸ்பெஷல் அவார்டாக மகிழ்ச்சியின் தூதுவர் விருது வழங்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்ஸ் எழுதிய பெயர்களின் அடிப்படையில் நிஷாவுக்கு மகிழ்ச்சியின் தூதுவர் விருது வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X