எஃப்எம் ஸ்டேஷனான பிக்பாஸ் வீடு.. ஆர்ஜேவான அர்ச்சனா.. ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஷிவானி.. ஜாலி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பாலாஜியும் ஷிவானியும் ரொமான்ஸ் செய்த காட்டப்பட்டது.
அதனை பார்த்த நெட்டிசன்கள், வேற கன்டென்ட்டே இல்லையா என கழிவி ஊற்றினர்.

அதை முழுசா காட்டுங்க
மேலும் பிக்பாஸில் நடக்கும் பிரச்சனைகளை முழுதாக காட்டினாலே போதும், லவ் ட்ராக்கெல்லாம் தேவையில்லை என்று கூறி வருகின்றனர். அதோடு அவர்களின் காதல் ஆர்ட்டிஃபிஷியலாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபன் டாஸ்க்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ், ஹவுஸ்மெட்டுகளுக்கு ஃபன் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

அர்ச்சனா ஆர்ஜே
இதில் பிக்பாஸ் வீடு எஃப் எம் ஸ்டேஷனாக மாற்றப்பட்டுள்ளது. சக போட்டியாளரான அர்ச்சனா ஆர்ஜேவாக உள்ளனர். மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஆடியன்ஸாக உள்ளனர். ஆர்ஜேவுடன் நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.

பாலாஜியை பிரியாமல்
அனிதா சம்பத், ரம்யா பாண்டிய மற்றும் சம்யுக்தா ஆகியார் போனில் ஆர்ஜே அர்ச்சனாவுடன் பேசி மாறி மாறி கலாய்ப்பதாக உள்ளது இன்றைய புரமோ. இதிலும் பாலாஜியை விட்டு பிரியாமல் உட்காந்திருக்கிறர் ஷிவானி.

ஃபிளையிங் கிஸ்
கறுப்பு நிற டி ஷர்ட்டில் செம செக்ஸி லுக்கில் உள்ள ஷிவானி, யாருக்கோ செம்ம ஸ்ட்ராங்காக ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார். பிக்பாஸ் வீடே, சிரிப்பும் ஜாலியுமாய் ஒரே ரகளையாக உள்ளது.

ஆப்பு வைக்க போகிறார்
புரமோவை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை, இன்றும் கோர்ட் டாஸ்க் கொடுத்து வெறுப்பேற்ற வில்லை, அதுவேபோதும்டா சாமி என்றும் கூறியுள்ளனர். சிலர் இப்படி ஹவுஸ்மேட்ஸ் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றாலே பிக்பாஸ் அடுத்து ஏதோ ஆப்பு வைக்க போகிறார் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











