தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இன்று பல சம்பவங்கள் நடைபெற உள்ளது புரமோவில் தெரிய வந்துள்ளது. முதல் புரமோவில் கன்ஃபெஷன் ரூமில் அனிதா சம்பத் கதறினார்.

இரண்டாவது புரமோவில் பாலாஜியை மொத்த ஹவுஸ் மேட்ஸும் கட்டம் கட்டுவதாக இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னைக்கு சரியான கச்சேரி இருக்கும் போல என்று எதிர்பார்த்துள்ளனர்.

தங்கம் சேகரிக்கும் டாஸ்க்

தங்கம் சேகரிக்கும் டாஸ்க்

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சுரங்கத்துக்குள் இருக்கும் தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ்.

4 பேர் குழுக்களாக

4 பேர் குழுக்களாக

இதனை தொடர்ந்து சுரங்க ஊழியர்களை போல் உடை உடுத்திக்கொண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தங்க சுரங்கத்திற்குள் 4 பேர் கொண்ட குழுக்களாக செல்கின்றனர்.

நீ யாரு கேட்க?

நீ யாரு கேட்க?

அப்போது பாலாஜி என்ன செய்தாரோ தெரியவில்லை, டென்ஷனான சம்யுக்தா, இது நல்லாயில்லை பாலா என்கிறார். அப்போது பாலாவுக்கு ஆதரவாக சனம் ஷெட்டி ஏதோ பேச, நீ யாரு கேட்க என்று விளாசி விடுகிறார் சம்யுக்தா.

விளாசிவிட்ட சம்யுக்தா

விளாசிவிட்ட சம்யுக்தா

உனக்கு எல்லாத்துக்கும் ஏதாவது இருந்தே ஆகனும், இல்லாட்டி அது நடக்கவே நடக்காது என சனம் ஷெட்டியை பிராண்டி விட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சனம் ஷெட்டி, மிரண்டு போய் பார்க்கிறார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day 23 Highlights
 தங்கத்தை களவாட முயற்சி

தங்கத்தை களவாட முயற்சி

இந்த கூத்துக்களை பின்னால் அமர்ந்து சைலன்ட்டாக வேடிக்கை பார்க்கிறார் அர்ச்சனா. இதனிடையே பாலாஜி சேகரித்த தங்கத்தை களவாட முயற்சிக்கிறார் ஜித்தன் ரமேஷ். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X