பிக்பாஸ் முகெனின் தந்தை திடீர் மரணம்.. உருக்கமாக இரங்கல் தெரிவிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

Recommended Video

Mugen Sparkle Outing | Mugen Rao | Sparkle

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகெனின் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முகென் ராவ். மலேசிய பாடகரான இவர், பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை யார் குறித்தும் பின்னால் பேசாமல் மற்ற போட்டியாளர்களை விடவும் சிறப்பாக விளையாடினார்.

இதேபோல் அனைத்து டாஸ்க்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு, முன்னிலை பெற்றார். இதனால் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற முகென், மக்களின் மனதை வென்று பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார்.

நேற்று மாலை மரணம்

நேற்று மாலை மரணம்

சிறுவயது முதலே அன்புக்காக ஏங்கியதாக பல முறை கூறியிருக்கிறார் முகென். இந்நிலையில் முகெனின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை காலமானார். 52 வயதான பிரகாஷ் ராவ் மேடை பாடகராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ஏற்பட்ட திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரங்கல்

இரங்கல்

பிரகாஷ் ராவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகென் தந்தையின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த ரசிர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான இயக்குநரும் நடிகருமான சேரனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன்

இதுதொடர்பாக இயக்குநர் சேரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசுதான் உன் பாடும் திறன்.. அனைத்தும் அறிவேன் தம்பி.. உன் பிக்பாஸ் வெற்றிகூட உன் தந்தையின் சந்தோசத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்போது உணர்கிறேன்.. ஆழ்ந்த அனுதாபங்கள் தம்பி.. என குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயக்குமார்

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமாரும் முகென் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், முகென் ராவ் உனது குடும்பத்திற்கு இரங்கல். உங்களின் இழப்பை கேட்டு வருத்தம் அடைகிறேன், குடும்பத்தில் ஏற்படும் ஒரு இறப்பு உங்களின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும்.. தைரியமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X