தாறுமாறாய் தறிக்கெட்டு ஓடிய ஹவுஸ்மேட்ஸ்.. கதற விட்ட கண்ண கட்டுதே டாஸ்க்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இப்போவே கண்ண கட்டுதே டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தறிக்கெட்டு தாறுமாறாய் ஓடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video
பிக்பாஸ் நிக்ழச்சியின் நேற்றைய எபிசோடில் தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.
இதனால் ஹவுஸ்மெட்ஸ் செம ஹேப்பியாக உள்ளனர். எவிக்ஷன் இல்லை என்பதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எந்த சண்டையும் சச்சரவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

புஸ்வாணம்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் லெட்டர் டாஸ்க்கை தொடர்ந்து இப்போவே கண்ண கட்டுதே டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இதில் ஹவுஸ்மெட்ஸ் கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணம் என இரு அணிகளாக பிரிந்தனர்.

வித்தியாசமான போட்டி
இந்த டாஸ்க்கில் ஆரி நடுவராக இருந்தார். இந்த டாஸ்க்குக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இரண்டு கட்டைகள் நிற்க வைக்கப்பட்டிருந்தது. அதில் இரு அணியை சேர்ந்த ஒவ்வொரு போட்டியாளரும் வந்து கட்டையில் நெற்றியை வைத்து 10 சுற்று சுற்றிவிட்டு எதிரில் இருந்த பேப்பரில் வரையப்பட்ட கையை தொட்டுவிட்டு மீண்டும் அணியினர் அருகே வரவேண்டும்.

சுற்றிய சுற்றில் தலைசுற்றி
இதில் யார் சரியாக செய்கிறார்களே அந்த அணியினர் வின்னர் என்று அறிவிக்கப்பட்டது. அதில் விதியின்படி சுற்றிவிட்டு ஓடத் தொடங்கினர் போட்டியாளர்கள், ஆனால் சுற்றிய சுற்றில் தலைசுற்றி ஒரு சைடாக ஓடி சுவரில் மோதினர்.

தறிக்கெட்டு தாறுமாறாய்
சிலர் சுற்றி விட்டு எழுந்த வேகத்தில் அங்கியே தள்ளாடி விழுந்தனர். மொத்தத்தில் ஹவுஸ்மேட்ஸ் போதையில் தறிக்கெட்டு தாறுமாறாய் ஓடுவதாய் இருந்தது. பார்க்கவே செம காமெடியாய் இருந்தது அந்த டாஸ்க். இதில் சனம் ஷெட்டி வடிவேலுவை போன்ற சைடாக ஓடினார். இந்த போட்டியில் புஸ்வாணம் டீம் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











