பிக்பாஸ் ஸ்க்ரிப்டட் இல்லை.. அந்த மாதிரி விமர்சனங்கள் தவறு.. அடித்து சொன்ன கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் இல்லை என அடித்து கூறியுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் தொடக்கத்திலேயே அரசியல் குறித்து பேசினார் நடிகர் கமல்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் அரசியல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்

விளக்கம் கொடுத்த கமல்

விளக்கம் கொடுத்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பார்வையாளர்கள், இது ஸ்க்ரிப்ட்டடாக இருக்கும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நேற்றைய எபிசோடில் விளக்கம் கொடுத்தார் கமல்.

மூன்றாவது முக்கியமானது

மூன்றாவது முக்கியமானது

அதாவது விமர்சனங்களில் மூன்று வகை உண்டு, கூலிக்கு மாரடிப்பது என்ற ரீதியில் விமர்சனம் செய்வது, புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்வது, நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக விமர்சனம் செய்வது. இதில் மூன்றாவது முக்கியமானது.

எனக்கு வாத்தியார்

எனக்கு வாத்தியார்

100 நாட்களில் 16 பேரின் கோபம் தாபம், பாசம், அவர்கள் செய்யும் தவறு அதனை திருத்திக் கொள்வது என அனைத்தையும் ஒருவரால் ஸ்க்ரிப்ட்டாக எழுத முடியும் என்றால் அவர்தான் எனக்கு வாத்தியார்.

ராபர்ட் ஆல்ட் மேன்

ராபர்ட் ஆல்ட் மேன்

அப்படி என்றால் மேலை நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். ராபர்ட் ஆல்ட்மேன் படத்தில் ஒரே நேரத்தில் பல கதாப்பாத்திரங்கள் பேசும் அத்தனையும் தெளிவாக கேட்கும்.

தோலுரித்து காட்டுகிறீர்கள்

தோலுரித்து காட்டுகிறீர்கள்

இதில் காட்டப்படுவது உண்மைதான். போலி இல்லையா என்றால் அதைத்தான் நீங்கள் தோலுரித்து காட்டுகிறீர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்க்ரிப்ட்டட் என்று கூறுபவர்களுக்கு நான் சொல்லும் பதில்.

உங்கள் செய்தியில்..

உங்கள் செய்தியில்..

விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. வாரம் தோறும் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் வேலை செய்கிறார்கள் என்று கூறிய கமல் இறுதியாக உங்கள் செய்தியில் இடம் வகிப்பது பெருமை.. நோ நியூஸ் இஸ் பேட் நியூஸ் என கூறி முடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X