எல்லோரும் பயந்த அந்த விஷயம் நடந்திருச்சு... ஹீரோயினாக நடிக்கும் பிக்பாஸ் ஜூலி!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள். நடிகை ஓவியா உள்ளிட்ட பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
அப்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெறுப்பைச் சம்பாதித்தாலும் இப்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தொகுப்பாளினி ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜூலி மீது வெறுப்பு
நல்ல பெயர் எடுக்க நீண்ட நாள் ஆகும் எனக் கூறப்படுவதை போல, ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியிலும் அவரது நடவடிக்கைகளை பலர் விமர்சித்து வருகின்றனர்.

விளம்பர படத்தில் ஜூலி
இந்நிலையில், ஜூலி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடை ஒன்றின் விளம்பரப் படத்திலும், சில நாட்களுக்கு முன்பு அப்பள நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றிலும் நடித்தார். அப்பள விளம்பரத்தில் குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார் ஜூலி.

கதாநாயகியாக நடிக்கும் ஜூலி
இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் 'ஜூலியும் 4 பேரும்', 'தப்பாட்டம்' போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திருப்புமுனையை ஏற்படுத்தும்
இது குறித்து ஜூலி, "இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு
பிக்பாஸ் ஜூலி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











