அரியலூர் அனிதா பயோபிக்கில் பிக்பாஸ் ஜூலி... ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended Video

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமாகிவிட்டார்கள். ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
அதுதவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் ஜூலி, 'உத்தமி' என டைட்டில் வைக்கப்பட்ட படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், ஜூலியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கைக் கதையில் உருவாகிறது.

ஜூலியானா
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீரத் தமிழச்சி' எனப் பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். நிகழ்ச்சியில் அவரது கேரக்டர் பெரும்பாலானோருக்கும் பிடிக்காமல் போனது.

தொடர்ச்சியாக வாய்ப்புகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலியானா குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் ஜூலி.

உத்தமி
பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கும் 'உத்தமி' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஜூலி. ஜூலி நடிக்கும் இந்தப் படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதைப்படி ஜூலி, சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக நடிக்கிறாராம்.

டாக்டர்.எஸ்.அனிதா MBBS
இன்று நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவின் பிறந்தநாள். இந்நிலையில், அனிதாவின் வாழ்க்கைக் கதையில் ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தில் அனிதா கேரக்டரில் ஜூலி நடிக்கிறாராம்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ஜூலி அனிதா வேடத்தில் இருக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழக மக்களால் தங்கள் மகள் எனக் கூறப்பட்ட அனிதா கேரக்டரில் ஜூலி நடிப்பதா என சமூக வலைதளங்களில் சிலர் பொங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications