மாதவிடாய் காலங்கள்.. நாப்கீனுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஜூலி நாப்கீன்களுடன் போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமான முழக்கங்களை போட்டு பெரும் பிரபலமானவர் ஜூலி.
இதன் மூலம் வீர தமிழச்சி என்று அப்போதே ட்ரென்ட்டானார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

வீர தமிழச்சி
அந்த நிகழ்ச்சியில் பொய்யும் புரட்டுமாக இருந்தார் ஜூலி. இதனால் மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். எந்த வாயால் அவரை வீர தமிழச்சி வீர தமிழச்சி என புகழ்ந்தார்களோ அதே வாயால் அவரை திட்டி தீர்த்தனர்.

படங்களில் வாய்ப்பு..
இதன் வெளிப்பாடாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் ஜூலி. பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஜூலிக்கு.

போட்டோக்கள்
அம்மன் தாயி, டாக்டர் எஸ்.அனிதா, உத்தமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மாடர்ன் டிரெஸ், டிரெடிஷனல் உடைகள் என விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

வச்சு செய்வார்கள்
ஜூலி என்ன செய்தாலும் அதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏதாவது தத்துவம் சொன்னாலும் சரி ஏதாவது போட்டோவை ஷேர் செய்தாலும் சரி.. ஜூலியை வச்சு செய்வார்கள் நெட்டிசன்கள்.

நாப்கின்களுடன் போஸ்
இந்நிலையில் நடிகை ஜூலி, மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுடன் போஸ் கொடுத்துள்ளார். ரியோ புராடெக்டுக்கு விளம்பரம் செய்துள்ளார் ஜூலி. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பாராட்டு..
இதனை பார்த்த நெட்டிசன்கள் முதல் முறையாக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்.. பாராட்டத்தக்கது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். அதேநேரத்தில் தொடை வரை ஷார்ட் டாப்ஸ் அணிந்துள்ள ஜூலி கிராப்பிக்ஸில் ஸ்ட்ராபெர்ரியை பறக்க விட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரணமாக கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











