பிக்பாஸ் கவினுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. குஷியில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் கவினுடன் குக் வித் கோமாளி பிரபலம் இணைந்து நடிக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதில் அவர் நடித்த வேட்டையன் கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்த கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பெண் போட்டியாளர்களுடன்
அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின். இதில் சக பெண் போட்டியாளர்களிடம் நெருக்கமாக பழகிய கவின், ஒரே நேரத்தில் பல பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்று கூறினார். இதனால் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

சாக்ஷி லாஸ்லியாவுடன் காதல்
தொடர்ந்து சாக்ஷி, லாஸ்லியா என மாறி மாறி காதலித்தார் கவின். இதனாலும் விமர்சனத்திற்கு ஆளானார். ஒரு பக்கம் கவினுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் மறுபக்கம் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ரூ.5 லட்சம் பணத்துடன்
சமூக வலைதளங்களில் கவினுக்கு ஆதரவு பெருகியது. வாரா வாரம் அதிக வாக்குகளுடன் காப்பாற்றப்பட்டு வந்தார். கவின் ஃபைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கவின்.

குக் வித் கோமாளி பிரபலம்
அதன் பிறகு லிஃப்ட் என்ற படத்தில் கமிட்டானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். இந்நிலையில் கவின் நடிக்கும் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் நடித்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

பவித்ரா லக்ஷ்மி
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த போட்டோவை பவித்ரா லக்ஷ்மி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ கோர்ட் காட்சியின் போது எடுக்கப்பட்டது என தெரிகிறது.

ரசிகர்கள் வாழ்த்து
இது என்ன படம் என்று தெரியாத நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் கவினுக்கும் பவித்ரா லக்ஷ்மிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கவினும் லாஸ்லியாவும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











