திடீரென டிரெண்டாகும் #கவின்அன்புசாம்ராஜ்ஜியம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கவினின் ரசிகர்கள் திடீரென #கவின்அன்புசாம்ராஜ்ஜியம் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாகவும், பின்னர் அதே சீரியலில் சரவணனாகவும் நடித்து பிரபலமானவர் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் கவினுக்கு அதன் பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

ஞாயிற்றுக் கிழமையும் அதுவமாக சமூக வலைதளத்தில் ஒன்று திரண்டுள்ள நடிகர் கவினின் ரசிகர்கள் #கவின்அன்புசாம்ராஜ்ஜியம் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கவினின் புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்களை தட்டி தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெற்றிமகன் கவின்

வெற்றிமகன் கவின்

நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோ ஆன பிறகு பிக்பாஸ் இல்லத்திற்கு சென்ற நடிகர் கவினுக்கு, அவரது ரியல் கேரக்டரை தினமும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு கவின் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் உருவானது. வெற்றிமகன் கவின் என்ற அடைமொழியுடன் கவின் ஹாஷ்டேக்கை தற்போது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கவின் கற்று தந்த பாடங்கள்

கவின் கற்று தந்த பாடங்கள்

கோலிவுட்டின் ஹாட் யங் ஹீரோவாக வலம் வரும் நடிகர் கவினிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்று ஒரு லிஸ்டே அவரது ரசிகர்கள் போட்டுள்ளனர். பிறர் உன்னை புறக்கணித்தால், அதை ஈஸியாக கையாள வேண்டும், விமர்சித்தால், கூலாக எடுத்துக் கொள்ள வேண்டும், உன் நெஞ்சுக்கு நேர்மையானவனாக நீ இருந்தாலே போதும், எப்போதும் நல்ல நண்பர்களை இழக்காமல் இருந்தால் வெற்றி கிடைக்கும் என பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஏன்

ஏன்

வேறு ஒன்றும் இல்லை பிக்பாஸ் கவின் மீது இருக்கும் அளவு கடந்த பாசம் தான் இந்த ஹாஷ்டேக் டிரெண்ட் ஆவதற்கு காரணம். மேலும், பிக்பாஸ் கவின் பிகில் அம்ரிதா அய்யர் நடிப்பில் உருவாகி உள்ள லிஃப்ட் படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், அந்த படம் விரைவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Kavin க்கு பதிலடி கொடுத்த Losliya | Bigg Boss Tamil | Kavin Losliya
கவிலியா

கவிலியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினும் லாஸ்லியாவும் காதலித்து வந்தனர். ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு, இருவரும் காதலிக்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதி செய்யவில்லை. இருவரும் தங்களுக்கான சினிமா வாழ்க்கையில் பிசியாகி வருகின்றனர். என்றாலும், கவிலியா ரசிகர்கள், கவின் ஹாஷ்டேக் டிரெண்டானாலும், லாஸ்லியா ஹாஷ்டேக் டிரெண்டானாலும் தங்களது பங்கை தவறாமல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X