Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Sports
நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை? வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்!
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அது உண்மைதானா? பிக்பாஸ் கவினுக்கு காதலியுடன் விரைவில் திருமணம்.. பொண்ணு யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
பீட்சா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த கவின் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இன்னுமா ஆண்டவரே சொல்லல.. நேத்தே உலகம் முழுவதும் தெரிஞ்சு போச்சு.. கமலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சாக்ஷியுடன் காதல்
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷியை முதலில் காதலித்தார். திருமணம் வரை இருவரும் பேசி டிஸ்கஸ் செய்தனர்.

லாஸ்லியாவுடன் காதல்
சக போட்டியாளரான லாஸ்லியாவும் தன்னை காதலிப்பதை அறிந்த கவின், சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். அடிக்கடி டபுள் மீனிங் டயலாக்கில் பேசுவது, எப்போதும் தனியாக அமர்ந்து கடலை போடுவது, நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை கழட்டிவிட்டு தனிமையில் பேசுவது என தங்களின் காதலை தீவிரமாக வளர்த்தனர்.

கவின்தான் உலகம்
கவினுடனான காதலால் சேரப்பா சேரப்பா என்று பாசமாக அழைத்து வந்த இயக்குநர் சேரனையும் தூக்கி எறிந்தார் லாஸ்லியா. பல இடங்களில் கவினுக்காக சேரப்பாவை விட்டுக்கொடுத்தார் லாஸ்லியா. கவின்தான் உலகம் என்றிருந்தார் லாஸ்லியா.

பெற்றோர் சம்மதத்துடன்
ஆனால் அவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் லாஸ்லியா. இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கூட, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

எதிர்ப்பையும் மீறி
கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போது கூட அவர் இல்லாமேல் என்னால் இருக்க முடியாது என்னையும் வெளியேற்றுங்கள் என்று பிக்பாஸிடம் கண்ணீர் விட்டார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்தார் லாஸ்லியா.

காதல் பிரேக்கப்
ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பல பொது நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்ற போதும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்ததாக கூறப்பட்டது.

கவின் நடித்தார்?
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ்லியாவின் அப்பா மரிய நேசன் மாரடைப்பால் கனடாவில் காலமானார். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து நண்பர்களின் உதவியுடன் இலங்கை புறப்பட்டார லாஸ்லியா. இதனிடையே கவினை லாஸ்லியா முழுவதுமாக நம்பியதாகவும் ஆனால் கவின் லாஸ்லியாவை நிகழ்ச்சிக்காகதான் காதலித்தார் என்றும் தகவல் வெளியானது.

விரைவில் திருமணம்
இதனால் லாஸ்லியா பெரும் ஏமாற்றமடைந்தார் என்றும் லாஸ்லியாவின் அழகு நிபுணரை கவின் தற்போது காதலித்து வருவதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. கவினுடைய காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.