அப்போ அந்த தகவல் உண்மையில்லையா? தளபதி 65ல கவின் நடிக்கலயாமே.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: தளபதி 65 படத்தில் கவின் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 65வது படமான தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தை கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான பூஜை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சன்டிவி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அபர்ணா தாஸ்

அபர்ணா தாஸ்

தளபதி65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் மலையாள நடிகையான அபர்ணா தாஸும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் அபர்ணா தாஸ்.

பூஜையில் பிக்பாஸ்

பூஜையில் பிக்பாஸ்

தளபதி 65 படத்தின் பூஜை போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. படத்தின் பூஜையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கவினும் கலந்து கொண்டார். அந்த போட்டோக்களும் வெளியானது.

கவின் நடிக்கவில்லை

கவின் நடிக்கவில்லை

கவின் பங்கேற்றதை பார்த்த நெட்டிசன்கள் தளபதி 65 படத்தில் கவின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறினர். இந்நிலையில் கவின் படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உதவி இயக்குநராக

உதவி இயக்குநராக

அதாவது கவின், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நண்பர் என்பதால் தளபதி 65 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் கவின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

முதல் முறையாக விஜய்யுடன்

முதல் முறையாக விஜய்யுடன்

இதனிடையே தளபதி 65 படத்தில் விடிவி கணேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விடிவி கணேஷ் நடிகரான இந்த 11 வருடங்களில் முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும் தளபதி 65 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X