சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி.. பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 7 ஆண்டுகள் ஜெயில்!
Recommended Video
சென்னை: சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், பெண்களின் உணர்வுகளோடு விளையாடி வருகிறார். ஏற்கனவே அபிராமி, சாக்ஷி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணமாக இருந்தார்.
சாக்ஷியை காதலிப்பதாக கூறி பின்னர் கழட்டிவிட்டார். தற்போது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறி வருகிறார். லாஸ்லியாவும் கவினை காதலிப்பதாக கூறுகின்றார்.

காதல் லீலைகள்
இதனிடையே கவினுக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கவின் தான் ஒரு பெண்ணுடன் 3 ஆண்டுகள் உறவில் இருந்ததாக கூறியுள்ளார். கவினின் காதல் லீலைகளை வைத்து சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கவின் தாயார் மோசடி
இந்த விவகாரங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி அப்பாவி பொதுமக்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
கவின் தாயார் உள்பட 3 பேர் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்தததாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

7 ஆண்டுகள் ஜெயில்
இந்த தீர்ப்பில் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் தாயார் உள்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்த விவரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கவினுக்கு தெரிவிக்கப்படுமா என தெரியவில்லை.

நண்பர்கள் வீட்டில் தஞ்சம்
ஏற்கனவே கடனை அடைக்கவே தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாக கவின் கூறியிருந்தார். மேலும் உறவினர்கள் யாரும் தனது குடும்பத்திற்கு முன்வராத நிலையில் தனது தாயையும் தந்தையையும் நண்பர்கள் வீட்டில் விட்டு வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











