வாவ்.. சிறப்பாய் வெளியாகும் பிக்பாஸ் கவின் படத்தின் மோஷன் போஸ்டர்.. பெத்த எதிர்பார்ப்பில் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் கவின் படத்தின் மோஷன் போஸ்டர் சிறப்பாய் வெளியாக போகும் தகவலால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கவின்.

சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

4 பேருடன் காதல்

4 பேருடன் காதல்

தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின். இதில் சாக்ஷி, லாஸ்லியா என காதலித்த கவின், 4 பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்று நினைத்தேன் என்று கூறினார்.

கண்டுகொள்ளாத விஜய் டிவி

கண்டுகொள்ளாத விஜய் டிவி

இதனால் கடுப்பான ரசிகர்கள் கவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ரசிகர்கள் இருந்தபோதும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் டிவி கடைசி வரை கவினை வெளியேற்றவில்லை.

பெட்டியுடன் சென்ற கவின்

பெட்டியுடன் சென்ற கவின்

ஆனால் விஜய் டிவி கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின். கவின் டைட்டில் வின்னர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறி கேம் சேஞ்சர் ஆனார் கவின்.

ஈகா எண்டெர்டெய்ன்மெண்ட்

ஈகா எண்டெர்டெய்ன்மெண்ட்

பிக்பாஸிலிருந்து வெளியே வந்த கவினுக்கு பட வாய்ப்புகள் வரிசைக் கட்டின. வினீத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று மோஷன் போஸ்டர்

இன்று மோஷன் போஸ்டர்

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

6 இயக்குநர்கள்

6 இயக்குநர்கள்

இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ள கவின், மேலும் ஒரு ஸ்பெஷல் தகவலையும் கூறியுள்ளார். அதாவது, லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட உள்ளனர் என்று அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X