ரியோ நல்லவருதான்.. அவர வெறுக்க காரணம் அவங்கதான்.. பிக்பாஸ் கொண்டாட்டம் புரமோவால் உருகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவுக்காக உருகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்து. சுமார் 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்கள் எதிர்பார்த்தப்படி ஆரி டைட்டில் வின்னர் ஆனார்.
பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கொண்டாம் நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

பெரும் வைரல்
இதில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது சக போட்டியாளர்களுடன் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் அவர்கள் ஷேர் செய்தனர். அந்த போட்டோக்கள் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரியோவின் புரமோ
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நாளை பிற்பகல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை முன்னிட்டு போட்டியாளர்களின் பர்ஃபாமன்ஸ் தனித்தனி புரமோவாக ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் ரியோவின் புரமோ வெளியாகியுள்ளது.

நீ தான் வின்னர்..
இதில் தனது அப்பா மற்றும் அம்மாவை அறிமுகப்படுத்தும் ரியோ, தான் ஒரு டெய்லரின் மகன் என்று கூறுகிறார். பிக்பாஸ் கொண்டாட்ட மேடைக்கு அழைத்து வரப்படும் இருவர் குறித்து பேசும் டிடி, நான் ஒரு டெய்லரோட மகன் இங்கே நிக்கிறேன்னு சொன்ன.. இப்போ உங்க அப்பாவை கொண்டு வந்து இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே.. நீ தான் வின்னர் என்கிறார்.

அர்ச்சனாதான் காரணம்
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ரியோ நல்லவர்தான் ஆனால் நாம் அவரை வெறுக்க காரணம் அர்ச்சனா தான் என கூறி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அர்ச்சனாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார் ரியோ. அர்ச்சனா வெளியேறியதற்கு காரணம் ஆரிதான் என்பது போல் நடந்து கொண்டார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

எளியவராக உள்ளார்
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ரியோ புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோவின் அப்பாவை பார்ப்பது டச்சிங்காக உள்ளது. மிகவும் எளியவராகவும் நல்ல இதயம் கொண்டவராகவும் தெரிகிறது. ரியோவின் அப்பாவுக்கு அன்புகள்.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உணர்ச்சியை வைத்து டிஆர்பி
பிக்பாஸ் கொண்டாட்டம் புரமோவில் ரியோவின் பெற்றோர் பங்கேற்றதை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்தவரின் உணர்ச்சி வைத்து சம்பாதிக்கும் டிஆர் பி என விஜய் டிவியை விளாசியுள்ளார்.

யாருக்கும் சான்ஸ் இருக்காது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டிடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்? அப்படியானால் யாருக்கும் பேச வாய்ப்பு கிடைக்காது. அவரே 90% பேசி விடுவார். மீதி 10% மட்டுமே மற்றவர்களுக்கு பேச சான்ஸ் கிடைக்கும் என்றும் என்று டிடியை பங்கமாய் கலாய்த்துள்ளார்.

டேமேஜ் கன்ட்ரோல்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டிவி பெரிய லெவல்ல டேமேஜ் கன்ட்ரோல் பண்ணுகிறார்கஙள. ஏற்கனவே அவருடைய குடும்பத்தை தெரியும். இப்போ புதுசா காட்ற மாதிரி எதுக்கு என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











