பொள்ளாச்சியில் பொங்கலை கொண்டாடிய ’பிக்பாஸ்’ லாஸ்லியா.. ஏர் பலூனில் பறந்த புகைப்படங்கள் செம்ம வைரல்!
சென்னை: நடிகை ஓவியாவுக்கு அப்புறம் பிக்பாஸில் அதிக அளவிலான ரசிகர்களின் ஆர்மியை அமைத்தது நம்ம இலங்கை பொண்ணு லாஸ்லியா தான்.
தமிழ்நாட்டில் அடுத்து ஹீரோயினாக ரெடியாகி வரும் லாஸ்லியா பொள்ளாச்சியில் இந்த ஆண்டு பொங்கலை தமிழ் ரசிகர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
மேலும், பொள்ளாச்சியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஏர் பலூன் கண்காட்சியிலும் பங்கேற்ற லாஸ்லியா, வானில் பறந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் வாழ்த்துக்கள்
செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட லாஸ்லியா பொள்ளாச்சியில் நேற்று சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ள லாஸ்லியா ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தார்.
பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் கோலாகலமாக நடைபெற்ற பலூன் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லாஸ்லியா, பலூனில் ஏறி வானில் பறந்த படி ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புடவை கட்டிய பட்டாம்பூச்சி
மஞ்சள் நிற சேலையில் பிங்க் நிற பிளவுசில் செம்ம ஹாட்டாகவும் க்யூட்டாகவும் பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ள லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சேலை கட்டிய பட்டாம்பூச்சி என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வானில் இருந்தபடி
மேலும், பலூன் திருவிழாவில் வானில் பறந்தபடி லாஸ்லியா இருக்கும் புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
பொங்கல் திருவிழா
பொள்ளாச்சியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் லாஸ்லியா பிங்க் நிற டிரெஸ்சில் செம்ம க்யூட்டாக வந்திருந்தார். அவரது புகைப்படங்கள் லாஸ்லியா ஆர்மியிடையே அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ரசிகர்களுடன் செல்ஃபி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த லாஸ்லியாவை நேரில் கண்ட பொள்ளாச்சி இளைஞர்கள் பயங்கர குஷியில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பலூனில் முதல்முறை
லாஸ்லியா முதல்முறை ஏர் பலூனில் வானில் பறக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பொங்கல் வாழ்த்துக்களையும் ரசிகர்களுக்கு பயம் கலந்த மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பொங்கல் வைத்து
பொள்ளாச்சியில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து லாஸ்லியா கொண்டாடும் வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











