ப்பா.. என்னா மேக்கப்பு.. பிக்பாஸ் பிரபலத்தை பேய்படத்துடன் ஒப்பிட்டு மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: ஃபுல் மேக்கப்பில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சக ஹவுஸ்மேட்டான கவினை காதலித்தார்.
முதலில் சாக்ஷியை காதலித்த கவின், லாஸ்லியா தன்னை விரும்புவதை அறிந்து அவரை கழட்டிவிட்டார். பின்னர் லாஸ்லியாவின் காதலை ஏற்றுக்கொண்டு அவரை காதலித்தார்.

கடலை போட்டு
ஆனால் லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் தொடர்ந்து கடலை போட்டு தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

காதல் குறித்து மவுனம்
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கூட ரசிகர்கள் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் மவுனம் சாதித்து வருகின்றனர்.

அமைதிக்கு காரணம்
இதனிடையே அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்றும், லாஸ்லியாவின் அப்பா போட்ட கண்டிஷன் தான் இருவரின் அமைதிக்கும் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நடிக்க முயற்சி
இருவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக உள்ளனர். லாஸ்லியா படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

படத்தில் கமிட்
அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எல்லாம் வெளியானது. இதனால் அவர் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் தீயாய் பரவியது.

மரண பங்கம்
அண்மையில் மாடர்ன் உடையில் செம மேக்கப்பில் வித்தியாசம் வித்தியாசமாக போஸ் கொடுத்திருந்தார் லாஸ்லியா. அதை பார்த்தே நெட்டிசன்கள் மரண பங்கம் செய்தனர்.
முன்னழகை காட்டி
இந்நிலையில் ட்ரெடிஷ்னல் மேக்கப்பில் ஃபுல் மேக்கப்பில் அட்டகாசமாக போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் லாஸ்லியா. மேலே ஷால் போடாமல் முன்னழகை காட்டியப்படி கிக்கேற்றியிருக்கிறார்.

ஆளே வேற மாதிரி
கண்களில் லென்ஸ் பதித்து ஆளே வேறமாதிரி இருக்கிறார் லாஸ்லியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் மேக்கப் இல்லாமலே நன்றாகத்தான் இருப்பீர்கள், ஏன் இவ்வளவு மேக்கப்பை போட்டு அழகை கெடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.

வாவ் பியூட்டி ஃபுல்
மேலும் சிலர் பேய் படங்களுடன் லாஸ்லியாவின் படத்தை ஒப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளனர். ஆனாலும் சிலர் வாவ்.. பியூட்டி ஃபுல் என வாயை பிளந்துள்ளனர்.
பேயுடன் ஒப்பீடு
ஹாலிவுட் பேய் படத்தில் வரும் பேய் படத்தின் போட்டோவை லாஸ்லியாவின் போட்டோவுடன் ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
என்ன இது?
லாஸ்லியாவின் ஓவர் மேக்கப் போட்டோவை பார்த்து என்ன இது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
போட்டோ ஷுட்டா
ஹேய் மார்க்கெட் இல்லன்னு போட்டோ ஷுட்டா.. மொக்கயா இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஒரு வேலை பொழப்பு
உனக்கு இது எல்லாம் ஒரு வேலை பொழப்பு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











