படு ஜோர் தான் போங்க.. பிக்பாஸ் லாஸ்லியாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் லாஸ்லியாவின் அடுத்த பட அறிவிப்பை ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தற்போது அறிவித்துள்ளது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிரண்ட்ஷிப், நடிகர் ஆரி உடன் ஒரு படம் என ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்த லாஸ்லியா, தற்போது மூன்றாவது படத்திலும் நடிக்க கமீட் ஆகி உள்ளார்.

ஓ மை கடவுளே தயாரிப்பு நிறுவனம்

ஓ மை கடவுளே தயாரிப்பு நிறுவனம்

நடிகர் ஆதியின் மரகத நாணயம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் பேச்சுலர் மற்றும் இந்த ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுக்களையும் அள்ளிய ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களை தயாரித்த Axess Film Factory தற்போது தனது 10வது படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லாஸ்லியாவின் அடுத்த படம்

லாஸ்லியாவின் அடுத்த படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த நடிகை லாஸ்லியாவுக்கு தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஆர்மியே உள்ளது. ஏற்கனவே இரண்டு பெரிய படங்களில் நடித்து வரும் லாஸ்லியா அடுத்ததாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் புதுப்படத்தில் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹர்பஜன் சிங்குடன்

ஹர்பஜன் சிங்குடன்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள படத்தில் லாஸ்லியா நாயகியாக அறிமுகமாகவுள்ளார். பிரண்ட்ஷிப் என்ற அட்டகாசமான டைட்டிலில் உருவாகி வரும் அந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹீரோ யார்

ஹீரோ யார்

லாஸ்லியாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிகர் பூரணேஷ் நடிக்கவுள்ளார். படக்குழுவினருடன் லாஸ்லியா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். தயாரிப்பாளர் தில்லி பாபுவிடம் அறிமுக இயக்குநர் ராஜா சரவணன் கூறிய த்ரில்லர் கதை பிடித்துப் போக படமும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

பிக்பாஸுக்கு வருவாரா

பிக்பாஸுக்கு வருவாரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல படங்களின் புரொமோஷன்களும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சி அல்லது லாஸ்லியாவின் படங்களின் புரொமோஷன் என மீண்டும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டுக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X