நள்ளிரவிலும் தொடர்ந்த கடிகார டாஸ்க்.. பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்த பேய்கள்.. பகீர் கிளப்பும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு டாஸ்க் நள்ளிரவிலும் நடைபெற்றுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டியாளர்கள் 5 குழுக்களாக பிரிந்து காலத்தை கணிக்க வேண்டும். இந்த டாஸ்க் தொடர்ந்து 45 மணிநேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முன்னணியில் ஆரி டீம்
நேற்றைய எபிசோடில் காலை முதல் இரவு வரை டாஸ்க் தொடர்ந்தது தெரியவந்தது. இதில் கடிகார முள்ளாய் இருந்த ஆரி, ரியோ மற்றும் கேபி நேரத்தை சரியாக கணித்து முன்னணியில் உள்ளனர்.

நள்ளிரவிலும் டாஸ்க்
வெயில், மழை என கால் கடுக்க நின்று வருகின்றனர் ஹவுஸ்மெட்ஸ். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கடிகார டாஸ்க், நள்ளிரவிலும் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

யார் வெற்றி பெற போகிறார்கள்
இரவில் நடுங்க வைக்கும் மழை, காற்று, இடி மின்னல், குளிர் என நின்றுள்ளனர் ஹவுஸ்மெட்ஸ். இந்த கடிகார முள் டாஸ்க் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

பிக்பாஸ் வீட்டில் பேய்
அதோடு நள்ளிவில் கடிகார முள்ளாய் ஹவுஸ்மெட்ஸ் நிற்க வெள்ளை உடையில் பேய் வேஷம் போட்ட மூன்று பேரை உள்ளே அனுப்பி அலற விட்டுள்ளனர். அதிலும் அசராமல் டாஸ்க்கில் ஈடுபட்டுள்ளனர் ஹவுஸ்மெட்ஸ்.


Click it and Unblock the Notifications











