இப்ப எப்டி லெட்டர பத்தி பேசுவீங்க.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை பங்கம் செய்து நெட்டிசன்ஸ் ஷேர் செய்திருக்கும் மீம்ஸ் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே அது தொடர்பான மீம்கள் இணையத்தில் வலைய வரத் தொடங்கிவிட்டன.
பிக்பாஸ் மட்டுமின்றி பிக்பாஸ் மீம்களை பார்த்து ரசிப்பதற்கு என்றும் ஒரு கூட்டம் பெரும் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

திணறடிக்கும் மீம்ஸ்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவங்கள் மற்றும் இன்று வெளியான புரமோக்கள் என அனைத்தையும் வைத்து பல மீம்களை ஷேர் செய்துள்ளனர். அந்த மீம்ஸ் இணையத்தை திணறடித்து வருகிறது. அவற்றில் சில,

அப்படியே ஷாக்காயிட்டேன்
நாமினேஷனில் தனது பெயர் இருப்பதை கேட்டு ஷாக்கான கேபியை வடிவேலுவை வைத்து கலாய்த்துள்ளனர். அதாவது வடிவேலு நான் அப்படியே ஷாக்காயிட்டேன் என்று பேசும் டயலாக்கை போட்டு பங்கம் பண்ணியுள்ளனர்.

கண்ணு கலங்க வைக்குறதே
பிக்பாஸ் கொடுத்த கடிதம் எழுதும் டாஸ்க்கில் சம்யுக்தாவும் அர்ச்சனாவும் அழுததை குறிப்பிட்டு நம்மள கண்ணு கலங்க வைக்குறதே இந்த பிக்பாஸுக்கு வேலையா போச்சு என கூறி கலாய்ததுள்ளனர்.

இப்போ எப்படி பேசுவீங்க?
பிக்பாஸில இன்று கடிதம் எழுதும் டாஸ்க்கை கொடுத்திருந்தனர். ஆனால் கடிதத்தை பார்க்க முடியாதபடி ப்ளர் செய்திருந்தனர். இதனை குறிப்பிடும் விதமாக இப்போ எப்படி இந்த லெட்டர பத்தி பேசுவீங்க என நக்கலடித்துள்ள இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தனை பார்க்குறீங்க..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ இதுவரை வெளியாகாததை கலாய்க்கும் வகையில் இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது. எத்தனை பேர் விஜய் டிவி புரஃபைல பார்த்துட்டு வர்றீங்க என கேட்டு ஆடியன்ஸை கலாய்த்துள்ளனர்.

எந்த சம்பந்தமும் கிடையாது
சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதை தொடர்ந்து அவருடைய ஃபேன்ஸ், இனிமேல் அந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என விஜய் டிவியை சொல்லும் வகையில் உள்ளது இந்த மீம்.


Click it and Unblock the Notifications











