படத்தில் புக்கான பிக்பாஸ் பிரபலம்.. பொள்ளாச்சி ஸ்லாங்கை கற்க ஸ்பெஷல் வொர்க் ஷாப்!
சென்னை: புதிய படம் ஒன்றில் புக்கான பிக்பாஸ் பிரபலம் பொள்ளாச்சி ஸ்லாங்கை கற்க பயிற்சி எடுத்து வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றவர் முகென் ராவ். மலேசிய தமிழரான முகென் பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் ஆவார்.
பாடகரான முகென், பிக்பாஸ் வீட்டில் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் பெரும் பிரபலமானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முகெனுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் திரண்டது.

புதிய படத்தில் ஒப்பந்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகெனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

பொள்ளாச்சி மாணவர்
இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் முகென். வேலன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவராக நடிக்கிறார் முகென் ராவ்.

பொள்ளாச்சி ஸ்லாங்
இதற்காக பொள்ளாச்சி ஸ்லாங்கில் வசனம் பேச பயிற்சி எடுத்து வருகிறார் முகென் ராவ். இந்தப் படத்திற்கான ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சி ஸ்லாங்கை கற்கும் பணியில் தீயாய் இறங்கியுள்ளார் முகென்.

பொள்ளாச்சி ஸ்லாங்
இதற்காக பொள்ளாச்சி ஸ்லாங்கில் வசனம் பேச பயிற்சி எடுத்து வருகிறார் முகென் ராவ். இந்தப் படத்திற்கான ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சி ஸ்லாங்கை கற்கும் பணியில் தீயாய் இறங்கியுள்ளார் முகென்.

அறிமுக இயக்குநர் கவின்
இதுதொடர்பாக பேசிய அறிமுக இயக்குநர் கவின், முகென் பிக்பாஸ் 3 டைட்டிலை வெல்லும் முன்பே அவரை எனக்கு தெரியும். அவர் ஒரு நல்ல பாடகர் மற்றும் நல்ல கலைஞர் ஆவார். ஆனால் அவர் மலேசியாவில் வாழ்ந்ததால் அவரை படத்திற்காக அணுகுவதில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்
அது எங்களுக்கு வேலைக்கு ஆகுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் இங்கே ஒரு வீட்டுப் பெயராக மாறியதுடன், இளைஞர்களுடனும் குடும்ப பார்வையாளர்களுடனும் நன்றாக பழகி இணைந்துவிட்டார். இந்தப் படத்தில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்த பையனாக கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

பாடி லாங்குவேஜ்
அவருக்காக அவருக்கு வொர்க் ஷாப் கொடுத்திருக்கிறோம். மீனாக்ஷி கோவிந்தராஜன் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். அவர் பாலக்காட்டை சேர்ந்த பெண்ணாக நடிப்பார். பொள்ளாச்சி ஸ்லாங், அந்தப் பகுதி இளைஞர்களின் பாடி லாங்குவேஜ்ஜுக்காக கூத்துப்பட்டறையை சேர்ந்தவர்கள் எங்களுக்கு பயிற்சி கொடுத்தனர்.

2 பாடல்கள் மட்டுமே
சில நேரங்களில் பேசும் போது முகெனுக்கு மலேசிய தமிழ் வந்து விடுகிறது. ஆனால் அவர் உடனடியாக அதனை சரிசெய்து விடுகிறார். தற்போது பொள்ளாச்சியில் ஷுட்டிங் நடைபெறுகிறது. பேசும் பகுதிகளையெல்லாம் முடித்து விட்டோம். இன்னும் 2 பாடல்கள் மட்டும்தான் ஷுட் செய்ய வேண்டும். இவ்வாறு இயக்குநர் கவின் கூறினார்.

பிரபு- ஸ்ரீரஞ்சனி
கவின், வீரம் படம் முதல் அண்ணாத்த படம் வரை இயக்குநர் சிவாவுடன் பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவை சேர்ந்த மரியா வின்சென்ட் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். பிரபு மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முகெனின் பெற்றோராக நடிக்கின்றனர் என்றும் இயக்குநர் கவின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











