பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நமீதா மாரிமுத்து வெளியிட்ட முதல் வீடியோ.. குவியும் லைக்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நமீதா மாரிமுத்து முதல் முறையாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கையான நமீதா மாரிமுத்து பங்கேற்றார்.
பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார் நமீதா மாரிமுத்து.

பட்ட அவமானங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கொடுக்கப்பட்ட ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார் நமீதா மாரிமுத்து. இதில் திருநங்கையாக தனது குடும்பத்திலும் இந்த சமூகத்திலும் பட்ட அவமானங்களை ஷேர் செய்தார்.

பலரும் கண்ணீர் விட்டனர்
திருநங்கைகள் பிச்சை எடுப்பதற்கும் பாலியல் தொழில் செய்வதற்கும் பெற்றோர்தான் காரணம் என்று கூறிய நமீதா மாரிமுத்து, பெற்றோராகிய நீங்கள் முதலில் மாறுங்கள் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அவரது பேச்சை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் பலரும் கண்ணீர் விட்டனர்.

திடீரென வெளியேறினார்
சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து திடீரென வெளியேறினார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்
ஆனால் என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டையால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்றும் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது என்றும் கூறப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு நமீதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்றும் தகவல் பரவியது.

ஏழை குழந்தைகளுக்கு உதவி
ஆனால் அதுகுறித்து நமீதா தரப்பில் இருந்து எந்த தவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நமீதா மாரிமுத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளியோரின் குழந்தைகளுக்கு துணிகளை வாங்கி கொடுத்து இருக்கிறார்.

பிக் பாஸில் கலந்து கொள்ளுமாறு
அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நமீதா மாரிமுத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை அவர் பிக் பாஸில் கலந்து கொள்ளுமாறு கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நமீதா மாரிமுத்துவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











