என்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறுவது கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் தொடருகிறது.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. கடந்த நாமினேஷன் புராசஸ்களை காட்டிலும் இந்த நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக இருந்தது.

நாமினேஷன் புராசஸ்

நாமினேஷன் புராசஸ்

ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் நாமினேட் செய்த போட்டியாளர்களின் போட்டோக்களை தீயில் போட்டு எரித்தனர். இந்த நாமினேஷன் புராசஸ் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

போட்டோக்கள் எரிப்பு

போட்டோக்கள் எரிப்பு

இருப்பினும் ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு ஆகாத போட்டியாளர்களை உற்சாகமாக தீயில் போட்டு கொளுத்தினர். ஹவுஸ்மேட்ஸ்களை தாங்கள் நாமினேட் செய்ததற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறினர்.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

இன்றைய நாமினேஷனின் படி 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி
சோம் சேகர், வேல் முருகன், ஆஜித், நிஷா, ரியோ, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

மக்களின் வெறுப்புக்கு..

மக்களின் வெறுப்புக்கு..

மொத்தம் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே ரியோ, நிஷா, அனிதா சம்பத் ஆகியோர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

ரியோ பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நாமினேஷனுக்கு வாங்க வச்சு செய்கிறோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் ரியோவும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இதனால் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X