பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன்.. ரெண்டு பேர மட்டும் வச்சு கும்மாங்குத்து குத்திய ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.

முதல் புரமோ
அதன்படி, அர்ச்சனா, சுரேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன், சோம் சேகர் ஆகியோர் ஆரியை நாமினேஷன் செய்கின்றனர். அவர் எல்லோருக்கும் அட்வைஸ் செய்வதாக கூறி ஆரியை நாமினேட் செய்துள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

ரியோ சிரித்தப்படியே
ஆரியை தொடர்ந்து அதிகப்பேரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. எதிர்ப்பார்த்தப்படி ரியோ, சுரேஷ் சக்கவர்த்தியை சிரித்தப்படியே ரொம்பவே மகிழ்ச்சியாக நாமினேட் செய்கிறார்.

நாமினேட்டாகும் சுரேஷ்
அவரை தொடர்ந்து சுரேஷ் பெயரை நாமினேட் செய்யும் ஜித்தன் ரமேஷ், அவர் சிம்பத்தியை கிரியேட் பண்ணுவதாக கூறுகிறார். ரம்யா பாண்டியன், ஆரி உள்ளிட்ட பெரும்பாலன ஹவுஸ்மேட்ஸ் சுரேஷ் சக்கரவர்த்தியை நாமினேட் செய்கின்றனர்.

ரொம்ப விஷமோ?
இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிகப்பேரால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஆரி எனத் தெரிகிறது. இந்த புரமோவில் இறுதியாக சுரேஷ் சக்கரவர்த்தி கையில் குடையை எடுத்தப்படி, அய்யய்யோ நீ ரொம்ப விஷமோ என கேட்கிறார்.

மக்கள் ஆதரவு அதிகம்
அவர் ஹவுஸ் மேட்ஸ்களில் யாரையாவது கேட்கிறாரா அல்லது பிக்பாஸை பார்த்து கேட்கிறாரா என்பது நிகழ்ச்சியில் தெரியவரும். பிக்பாஸ் போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் அதிக ஆதரவையும் நற்பெயரையும் பெற்றிருப்பவர் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











