இந்த சீசன்ல பிக்பாஸே செம ஃபார்ம்ல இருக்கார் போல.. தூங்கிய ஹவுஸ்மேட்ஸை எப்படி எழுப்புனாரு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தூங்கிய ஹவுஸ்மேட்டுகளை பிக்பாஸ் எழுப்பிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் வீட்டில் காலையில் போட்டியாளர்களை எழுப்ப வேக்கப் சாங் போடுவது வழக்கம்.
வேக்கப் சாங்கை கேட்டதும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எழுந்து நடனமாடி வருகின்றனர்.

தூங்கிய ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் விடிய விடிய இந்த டாஸ்க் நடைபெற்றது. இதனால் இரவெல்லாம் தூங்காத ஹவுஸ்மேட்ஸ், கிடைத்த நேரத்தில் தூங்கினர்.

தூங்காதே தம்பி தூங்காதே
பகல் நேரத்தில் தூங்கினால் நாயை குரைக்க விடும் பிக்பாஸ், நேற்று தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை ஒலிக்கச் செய்தார். தூங்காதே தம்பி தூங்காதே தம்பி.. இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே.. பட்டு கோட்டை வார்த்தைகளை போட்டு.. நம்ம புரட்சியார் பாடி வைத்த பாட்டு.. கண்ண முழிச்சுக்கடா நீயும் இதைக் கேட்டு.. உன் சுறுசுறுப்ப காரியத்தில் காட்டு.. தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை ஒலிப்பரப்பி அதிர்ச்சி கொடுத்தார்.

எல்லாரும் எந்திருச்சுட்டீங்களா?
தொடர்ந்து குட்மார்னிங் என்ற பிக்பாஸ் எல்லாரும் எந்திருச்சுட்டீங்களா.. இந்த புதுநாள்ல மூன்றாவது பகுதி தொடங்க உள்ளது. இதில் யார் யாருக்கு மதிப்பெண்கள் குறைவா இருக்கோ அதை அதிகப்படுத்த முயற்சிப்பண்ணுங்க.. ஆல் த பெஸ்ட் என்றார்.

ரசிகர்களையும் கவர்ந்துள்ளது
இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமடைந்தனர். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ரொம்பவே ஜாலியாக பேசி வருகிறார். ஹவுஸ்மேட்ஸ்களை கலாய்ப்பது, கிண்டலடிப்பது என்றும் வேற லெவலில் இறங்கியுள்ளார். இடை இடையே பிக்பாஸ் இப்படி பேசி வருவது ஹவுஸ்மேட்ஸை மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











