வனிதாவை சீண்டும் பிக்பாஸ்.. 'அவரை' கொண்டுவந்து பிபியை எகிற வைக்க போகிறார்களாம்!
சென்னை: வனிதாவை சீண்டும் வகையில் கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் அதிகம் ஃபோகஸ் செய்த ஒரு நபரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான டீசர் வெளியானது முதலே அதனை காண தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.
விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் அதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் அரசல் புரசலாக வெளியாகி வருகிறது.

டிக்டாக் இலக்கியா
சோஷியல் மீடியாவில் தனது கிளாமர் வீடியோக்களை இறக்கி, ரசிகர்களை சூடு ஏற்றி வரும் நடிகை கிரண் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு போட்டியாக கவர்ச்சி புயலான டிக்டாக் இலக்கியாவை களமிறக்க போவதாகவும் தகவல் வெளியானது.

பெத்த தொகை
இதனிடையே நடிகை ஒருவரை அணுகிய போது அவர் பெத்த தொகை கேட்டதாகவும் அதற்கான டீலிங் முடிந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு ஆகாத ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் குழு பேச்சுவார்த்தை
அதாவது கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

டிஆர்பிக்கு முக்கியத்துவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். கோடி கோடியாக கொட்டி நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால் டிஆர்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ரேட்டிங்குக்காக
அதற்காக எப்படிப்பட்ட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போவார்கள் நிகழ்ச்சி குழுவினர். ரேட்டிங்குக்காக போட்டியாளர்களை தற்கொலைக்கு கூட தூண்டுவார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு முன் ஒளிப்பரப்பான மூன்று சீசன்களிலும் இதுபோன்ற பல சம்பவங்களை பார்த்துள்ளோம்.

கலவர பூமியாக
முதலில் காதல் என கோர்த்து விடுவார்கள், பின்னர் சிண்டு முடித்து விடும் கேரக்டரை எக்ஸ்போஸ் செய்வார்கள். அதனை தொடர்ந்து அடிதடி வரை கொண்டு சென்று கலவர பூமியாக காட்டி பிபியை எகிற வைப்பார்கள். முதல் சீசனில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றார். மூன்றாவது சீசனில் நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றார்.

எலிசபெத் ஹெலன்
முதல் நாள் முதல் பரபரப்புக்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை சீண்டும் வகையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனை பங்கேற்க செய்ய முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது.

வாய்க்கு அவல்
வனிதா சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அதனை பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாகிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேசு பொருளான நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியை கொண்டு வந்து அவல் போட பார்க்கிறதாம் நிகழ்ச்சி குழு.

மீரா மிதுன்
ஏற்கனவே நடிகர் பாலாஜியும் அவரது மனைவியும் சண்டை போட்டு பிரிந்திருந்த போது இருவரையும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். அதேபோல் கடந்த சீசனில் சாக்ஷி அகர்வால், அபிராமி ஆகியோருக்கு மீரா மிதுனுடன் புகைச்சல் இருந்த நிலையில் அவரையும் இழுத்து வந்து சூடு காய்ந்தார்கள்.

குளிர்காய போகிறார்கள்
ஆகையால் தற்போது பீட்டர் பால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மனைவியான எலிசபெத் ஹெலனை அழைந்து வந்து குளிர்காய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வனிதாவுடன் மல்லுக்கு நிற்கும் சூர்யா தேவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

பங்கேற்காமலே..
இந்நிலையில் எலிசபெத் ஹெலனையும் அழைத்து வந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள். எது எப்படியோ போன பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் வெற்றிக்கு காரணமாய் இருந்தவர் வனிதா. இம்முறை பங்கேற்காமலே காரணமாக போகிறார்...!!


Click it and Unblock the Notifications











