விஜய் டிவி செய்த அதிரடி மாற்றம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாறியது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நேற்று ஆஜித் வெளியேறியதை தொடர்ந்து, மொத்தம் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

தரக்குறைவாக பேசி
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவுமாய் இருந்தது. இதனால் பார்வையாளர்களே பதறி போயிருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி சக போட்டியாளரான ஆரியை தரக்குறைவாக பேசி அடிக்க பாய்ந்தார்.

கொஞ்சமும் சட்டை செய்யவில்லை
இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து கொடுத்து வெளியேற்ற வேண்டும் என் கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை நிகழ்ச்சி தரப்போ கமல்ஹாசனோ கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை.

நேரம் மாற்றம்..
இதனால் ரரிகர்கள் செம கடுப்பில் உள்ளனர். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எஞ்சியுள்ள நாட்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி ஞாயிறு..
அதாவது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. கமல் வரும் நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 9.30 மணி முதல் 11 மணி வரை ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜா ராணி 2
இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை பிக்பாஸ் ஒளிபரப்பான இரவு 9.30 மணிக்கு ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்ப்பு
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர்.


Click it and Unblock the Notifications











