பிக்பாஸ் புரமோ ரெடியாயிடுச்சாமே.. எப்போ டெலிகாஸ்ட் பண்ண போறாங்க தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு சீசனுமே பெரும் ஹிட்டானது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கும்.

இந்தி, தெலுங்கு
ஆனால் இம்முறை கொரோனா லாக்டவுடன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகி வருகிறது. ஆனால் இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டனர். இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் நாகார்ஜூனாவும் தொகுத்து வழங்குகின்றனர்.

பிரபலங்களின் பட்டியல்
இதற்கான டீசர் மற்றும் புரமோ வீடியோக்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4ஐ தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என பிரபலங்களின் பட்டியலும் வெளியானது.

புது கெட்டப்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கையும் கடந்த சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இதற்கான போட்டோ ஷுட்டில் கமல் பங்கேற்றதாக தாடியுடன் இருக்கும் அவரது புது கெட்டப் போட்டோ ஒன்றும் வைரலானது.

ஒரு சில தினங்களில்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோவை நிகழ்ச்சிக்குழு தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் முதல் புரமோ வீடியோவும், செப்டம்பர் முதல் வாரத்தில் மற்றொரு வீடியோவும் டெலிகாஸ்ட் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

என்டெர்டெய்ன்மென்ட்
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் கிரண், ரம்யா பாண்டியன், சுனைனா, வித்யூலேகா, சூர்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் சுனைனா ஆகியோர் மறுத்திருந்தனர். இருப்பினும் விரைவில் மக்களுக்கு செம என்டெர்டெய்ன்மென்ட் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











