பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக.. களைக்கட்டும் நவராத்திரி.. 4 மணி நேரம் இடைவிடாத கொண்டாட்டம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் எவிக்ஷன் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த வாரம் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் எவிக்டானார்.

ஆயுத பூஜை
ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃபிரி பாஸ் இருந்ததால் ஆஜித் அந்த பாஸை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் தொடருவதாக கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியாக நேற்று பேசிய கமல், ஆயுத பூஜயை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் திங்கள் கிழமை தனி விருந்து காத்திருப்பதாக கூறினார்.

4 மணி நேரம்
அதன்படி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கிராம வாசிகளாகவும் நகர வாசிகளாகவும் இணைந்து அமர்க்களப்படுத்த உள்ளனர். மாலை 6.30 மணி முதல் 4 மணி நேரம் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கொலு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீடு வாழை மரம் தோரணம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வித விதமான உணவுகள், ஹவுஸ்மேட்ஸ்களின் கை வண்ணத்தில் உருவான பொம்மைகள் என கொலு வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில்..
ஹவுஸ்மேட்ஸ் ட்ரெடிஷ்னல் உடையில் பட்டையை கிளப்பியுள்ளனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைக்கட்டியுள்ளது பிக்பாஸ் வீடு. பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நவராத்திரி செலிபிரேஷன் நடைபெறுவதாக கூறுகிறர் அனிதா சம்பத்.

வேலை செய்ய விடுங்க
அப்போது குறுக்கிடும் வாய்ஸ் ஓவர், 4 மணி நேரம் இடைவிடாத நிகழ்ச்சி என்பதை விட்டுட்டீங்களே என கூற சாரி என்கிறார் அனிதா. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 4 மணி நேரம் ஒளிபரப்ப உள்ளதை பார்த்த நெட்டிசன்கள், எங்களை வேலை செய்ய விடுங்கள் என புலம்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











