பிக்பாஸ் ரைசா யாரை லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சக்கணுமா? இதைப் பாருங்க புரியும்!

சென்னை: காதலர் தினமான நாளை நடிகை ரைசா வில்சன் தன்னுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி சொல்லப் போறாங்க என ஜி.வி. பிரகாஷ் குமார், ஓவியா உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ மூலம் பில்டப் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற மாடல் அழகி ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா வில்சன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் பிளாட்ஃபார்ம்

பிக்பாஸ் பிளாட்ஃபார்ம்

மாடல் அழகியாக வலம் வந்த ரைசா வில்சன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான ரைசா வில்சன் மற்றும் ஓவியாவை இன்றளவும் பிக்பாஸ் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துள்ளனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ரைசாவுக்கு மிகப்பெரிய பிளாட்ஃபார்மாக அமைந்தது.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு, நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், அவரது இசையில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் செம்ம க்யூட்டாக நடித்திருந்தார் ரைசா வில்சன். ஆரம்ப படமே லிவிங் டுகெதர் கான்செப்ட்டில் உருவாகி இருந்து தமிழக இளைஞர்கள் இதயங்களில் இடம்பிடித்திருந்தது.

வர்மா

வர்மா

பியார் பிரேமா படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா படத்தில், நடிகை ரைசா வில்சனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வர்மா படம் டிராப் ஆனதால், ஆதித்யா வர்மா படத்தில், ரைசா நடித்த கதாபாத்திரத்தில், நடிகை பிரியா ஆனந்தை நடிக்க வைத்திருந்தனர்.

ரிலேஷன்ஷிப் பத்தி

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ரைசா வில்சன், தனது ரிலேஷன்ஷிப்பை பத்தி ஏதோ சொல்லப் போறாங்க, அது என்னவா இருக்கும், யாரா இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியுள்ள வீடியோ பதிவை நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

தலைவி ஓவியா

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து நடிகை ஓவியா வெளியிட்டுள்ள வீடியோவில், டார்லிங் ரைசா, காதலர் தினத்தை முன்னிட்டு ஏதோ ஸ்பெஷல் நியூஸை சொல்ல உள்ளார் என யோசித்த படி, என்னவா இருக்கும், ஏதா இருக்கும், வெயிட் பண்ணி பார்ப்போமே எனக் கூறியுள்ளார். அவரது காதுகளில் தொங்கும் நீண்ட வளைய கம்மல் குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிங்களா.. மிங்கிளா

சிங்களா.. மிங்கிளா

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷாவும் ரைசா வில்சன் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ரைசாவின் ரசிகர்கள், நீங்க அவங்களோட ஃப்ரெண்டு தான, அவங்க சிங்கிளா.. கமிட்டட்டான்னு சொல்லுங்க என நச்சரிப்பார்கள், இதற்கான விடையை நாளைக்கு ரைசாவே சொல்லப் போகிறார் ஆளவிடுங்க என நிஷா எஸ்கேப் ஆகியுள்ளார்.

என்னவா இருக்கும்

என்னவா இருக்கும்

இப்படி ஜி.வி. பிரகாஷ் குமார், நிஷா மற்றும் ஓவியா என தொடர்ந்து நடிகர்கள் ரைசா குறித்து பீடிகை போட்டு வருவதை பார்த்தால், நாளைக்கு ஏதோ புதுபட அப்டேட்டை நடிகை ரைசா வில்சன் அறிவிப்பார் என்றே தோன்றுகிறது. புதுப்பட அறிவிப்பா அல்லது பாய் பிரெண்ட் குறித்த அறிவிப்பா என்பது நாளைக்கு தெரிந்துவிடும். ஒருவேளை ஹரிஷ் கல்யாணா இருக்குமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X