அட... பிக்பாஸ் ராஜுவின் மனைவி இவர்தானா... வைரலாகும் திருமண போட்டோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ராஜுவின் திருமண போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஒருவர் நடிகர் ராஜு. திருநெல்வேலியை சேர்ந்த இவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.

சரவணன் மீனாட்சி தொடர்

சரவணன் மீனாட்சி தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் ராஜு. தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் கவினின் தோழனாக நடித்திருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில்

பாரதி கண்ணம்மா சீரியலில்

இந்த சீரியலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. இதனை தொடர்ந்து பின்னர் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார். பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் ராஜு. பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் சீசன்2வில் மாயனின் நண்பனாக கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சினிமா நடிகர், சீரியல் நடிகர், உதவி இயக்குநர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டுள்ள ராஜு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தான் உண்டு தன் வேலை உண்டு

தான் உண்டு தன் வேலை உண்டு

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொஞ்சநஞ்சம் காமெடி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ராஜுதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் தற்போது வரை பெரிதாக யாரிடமும் வம்பு சண்டை என இல்லாமல் இருக்கிறார் நடிகர் ராஜு. பிரச்சனை என்று வந்தாலே ஒதுங்கி தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார்.

அதிக ரசிகர்களை கொண்டவர்

அதிக ரசிகர்களை கொண்டவர்

அடிக்கடி தனது பல குரல் திறமையை காட்டி பார்வையாளர்களையும் ஹவுஸ்மேட்டுகளையும் குஷிப்படுத்தி வருகிறார். இதனாலேயே இந்த சீசனில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஆண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜு.

மனைவியுடன் மாலையும் கழுத்துமாக

மனைவியுடன் மாலையும் கழுத்துமாக

இந்நிலையில் ராஜுவின் திருமண போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ராஜு தனது மனைவியுடன் மாலையும் கழுத்துமாக உள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவர்தான் ராஜுவின் மனைவியா என கேட்டு வருகின்றனர். மேலும் மேட் ஃபார் ஈச் அதர் என்றும் கமெண்ட் செய்மு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X