நேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி!

By Vignesh Selvaraj

Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview

சென்னை : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை 'ஹரஹர மஹாதேவகி' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் இருக்கின்றன. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் வரும் அனைவருமே (பேய் உட்பட) டபுள் மீனிங் டயலாக் பேசுகிறார்கள்.

Biggboss reference used in Iruttu Araiyil murattu kuththu movie

அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரெஃபரன்ஸை பயன்படுத்தி இருக்கிறார்கள். கௌதம் கார்த்திக், வைபவி உள்ளிட்ட நால்வர் தாய்லாந்தில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் சென்ற நாள் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவது போலவே அறிவிக்கப்படுகிறது.

வீட்டில் முதல் நாள் நேரம் 8 மணி, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உறங்குகிறார்கள், புதிதாக கிரிஷ் கல்யாண் வீட்டுக்குள் வருகிறார், பரணி போல சுவர் ஏறிக் குதிக்க முயற்சிக்கிறார் என பல இடங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் டயலாக் வைத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இடது மூலையில் வரும் சிறிய டயலாக் பாக்ஸில் நாளும் நேரமும் வருவது போலவே இந்தப் படத்திலும் வருகிறது. சூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி மாதிரியை படத்திற்கு பயன்படுத்தி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X