வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் அழகில் உள்ள பிக்பாஸ் பிரபலத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ரேஷ்மா. ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.
இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றார் ரேஷ்மா.

புஷ்பா புருஷன் யாரு?
அந்தப்படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் ரேஷ்மா. மேலும் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த புஷ்பா புருஷன் யாரு என்ற டயலாக்கும் பெரும் பிரபலமானது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரேஷ்மா. ஒரு சார்பாக, டீமாக இருந்தாலும் நியூட்ரல் ரேஷ்மா என தன்னை கூறிக் கொண்டார்.

விவாகரத்து
நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களை கூறி ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் சற்று கலங்கியே போயினர். இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தயானா ரேஷ்மாவின் இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
சேரனை விமர்சித்து
அவரது தனக்கு தானே டெலிவரி பார்த்துக்கொண்டது கணவர்களின் சித்ரவதைக்கு ஆளானது என பல விஷயங்களை கூறி பார்வையாளர்களை கண்ணீர் விட வைத்தார். இதனால் பார்வையாளர்களுக்கு ரேஷ்மா மீது அனுதாபம் ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டில் சில காலம் நீடிக்கும் வாய்பை பெற்ற ரேஷ்மா சேரனை விமர்சித்து சர்ச்சைக்குள்ளானார்.

குவியும் லைக்ஸ்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தது முதல் தொடர்ந்து போட்டோ ஷுட்டுகளை நடத்தி வருகிறார் ரேஷ்மா. மாடர்ன் உடை, சேலை என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் குவிக்கிறது ரேஷ்மாவின் போட்டோக்கள்.

வில் பவர் கேப்ஷன்
இந்நிலையில் நடிகை ரேஷ்மா, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம சூப்பராக போட்டோ எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற ஜாக்கெட், மெருன் நிற புடவை என ஃபுல் மேக்கப்பில் அசத்தலாக உள்ளார். ரேஷ்மா இந்த போட்டோவுக்கு வில் பவர் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மேக்கப்பை கூட்டுங்க
ரேஷ்மாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பியூட்டிஃபுல், சூப்பர் பவர் என வர்ணித்துள்ளனர். சிலர் மேக்கப்பை கொஞ்சம் கூட்டுங்க என்றும் கூறியிருக்கிறார். மேலும் மிக நேர்த்தியான அழகு என்றும் ரேஷ்மாவை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர் நெட்டிசன்கள். ரேஷ்மாவின் இந்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











