நிறுத்திக்கிங்க.. இதோட நிறுத்திக்கிங்க.. ட்ரோலர்ஸ்க்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ் புகழ் சாக்ஷி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sakshi 1st Post: மறைமுகமாக Kavinனை தாக்கும் Sakshi- வீடியோ

சென்னை: தன்னை கிண்டலடித்து வரும் ட்ரோலர்ஸ்களை பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி எச்சரித்துள்ளார்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் சாக்ஷி அகர்வால். மற்றவர்களை பற்றி போட்டுக்கொடுத்து சண்டை மூட்டிவிட்டதால் அவரை விஷம், பாய்சன், ஸ்னேக்ஷி என்று பெயர் வைத்திருந்தனர்.

சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆன பிறகும் கூட சாக்ஷியை விடவில்லை ட்ரோலர்ஸ் அவரை வச்சு செய்து வந்தது. சாக்ஷியை ஸ்னேக்ஷி என்று பெயரிட்டு மீம்ஸ்களை வெளியிட்டு கொண்டாடி வந்தனர்.

கிண்டல்

கிண்டல்

தன்னை கலாய்த்ததை பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு கண்டும் காணாமல் இருந்தார் சாக்ஷி. அவர் ஏதாவது டிவிட் போட்டால் கூட நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்து வந்தனர்.

என்னுடைய உரிமை

என்னுடைய உரிமை

இந்நிலையில் தன்னை பற்றி ட்ரோல் செய்யும் ட்ரோலர்ஸ்களை விளாசியுள்ளார் சாக்ஷி. இதுதொடர்பாக அவர் கோபமாக பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னுடைய டிவிட் என்னுடைய உரிமை! அமைதியாக உங்கள் வாழ்க்கையை பாருங்கள்!

கோவில் கட்டுங்கள்

இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு பேசும் உரிமை உள்ளது. ட்ரோலர்ஸ் என்னை பின்தொடர்வதை நிறுத்துங்கள். பயனுள்ள ஏதாவதை செய்யுங்கள். மேலும் தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு போய் கோவில் கட்டுங்கள் என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

கர்மா

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அவரை சமாதானப்படுத்தியுள்ளனர். உங்களை பற்றி ட்ரோல் செய்வது, கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் தான் என்றும் இதனை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்கான கர்மாவை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்

கவலைப்படாதீர்கள்

உங்களுக்கு எப்போதெல்லாம் ஆதரவு தேவையோ அப்போதெல்லாம் நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்றும் இந்த ட்ரோலர்ஸ்களை பற்றி கவலைப்படாதீர்கள் என்றும் டிவிட்டி சாக்ஷியை கூலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X