எங்க கிங் பொறந்துட்டான்.. ஆண் குழந்தைக்கு அப்பாவானார் சாண்டி மாஸ்டர்.. குவியும் வாழ்த்து!
சென்னை: பிக்பாஸ் சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாண்டி. அந்த நிகழ்ச்சியில் ஹியூமர் சென்ஸுடன் நகைச்சுவைக்கு முக்கிய காரணமாய் இருந்தார்.
எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை கலாய்ப்பது, கிண்டலடிப்பது என சுவாரசியமாக கொண்டு சென்றார் சாண்டி.

மகளும் பிரபலமானார்
தனது மகள் லாலா மீது அதிக அன்பு வைத்திருந்த சாண்டி லாலாவை நினைத்து நினைத்து அடிக்கடி கண்ணீர் விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது மகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

படங்களில் சாண்டி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி. அண்மையில் சாண்டியின் கோரியோகிராஃபில் வெளியான கர்ணன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில்வியா வளைகாப்பு
சாண்டி சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவருக்கு வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

கிங் பொறந்துட்டான்..
இந்நிலையில் சில்வியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாண்டி மாஸ்டர் எங்க கிங் பொறந்துட்டான்... லவ் யூ சோ மச் கண்ணம்மா என பதிவிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்து
மேலும் அப்பாவின் விரலை குழந்தை பற்றியிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள சாண்டி, பாகுபலி படத்தில் இடம்பெற்ற வந்தாய் அய்யா வந்தாய் அய்யா பாடலுடன் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











