பிக்பாஸ் சாண்டி வீட்ல விசேஷம்.. மீண்டும் கர்ப்பமான மனைவி.. அம்மாவுக்கு வளையல் பூட்டிய லாலா பாப்பா!

சென்னை: பிக்பாஸ் சாண்டி மனைவியின் வளையகாப்பு போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Sandy master வீட்டில் விஷேசம் Sylvia Second baby shower function | Lala, Cynthia

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நகைச்சுவைக்கு முக்கிய காரணமாய் இருந்தார்.

எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை கலாய்ப்பது, கிண்டலடிப்பது என சுவாரசியமாக கொண்டு சென்றார் சாண்டி.

மகளும் பிரபலமானார்

மகளும் பிரபலமானார்

தனது மகள் லாலா மீது ரொம்பவே அன்பு வைத்திருந்தார். லாலாவை நினைத்து நினைத்து உருகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மட்டுமின்றி தனது மகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

படங்களில் கவனம்

படங்களில் கவனம்

இருவருக்கும் என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. நடன இயக்குநரான இவர் பல படங்களில் பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி.

வீட்டில் விசேஷம்

வீட்டில் விசேஷம்

அண்மையில் சாண்டியின் கோரியோகிராஃபில் வெளியான கர்ணன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது.

மனைவிக்கு வளைகாப்பு

மனைவிக்கு வளைகாப்பு

அதாவது சாண்டியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த போட்டோக்களை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மகளும் வளையல் போட்டு

மகளும் வளையல் போட்டு

அதில் சாண்டி தனது மனைவிக்கு வணக்கம் சொல்லி வளையல் பூட்டுகிறார். இதேபோல் உறவினர்களும் சாண்டியின் மனைவிக்கு வளையல் அணிவித்து விடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து சாண்டியின் மகள் லாலாவும் தனது அம்மாவுக்கு வளையல் பூட்டி விடுகிறார்.

பாதுகாப்பாய் இருங்க

பாதுகாப்பாய் இருங்க

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சாண்டியின் மனைவியை பாதுகாப்பாய் இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X