நாமினேஷன் காரணத்தை சொல்லி பற்றவைத்த பிக்பாஸ்.. கடுப்பான பாலா.. ஷாக்கான ஷிவானி.. வேற லெவல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நாமினேஷனுக்கான காரணத்தை சொல்லி பற்ற வைத்துள்ளார் பிக்பாஸ்.
இன்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இதில் அனிதா, சுச்சி, பாலாஜி , ஆரி ஆகிய நான்கு பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது.

நாமினேஷன் காரணம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் பெயர்களை கூறும் பிக்பாஸ், நாமினேஷனுக்கான காரணத்தை கூறியுள்ளார்.

சிடுமூஞ்சி மேக்ஸ்
அதன்படி நான்சிங்ல போறாங்க.. சிடுமுஞ்சி மேக்ஸ், காதல் கண்ண மறைக்குது.. போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்ஷன் புராசஸுக்கு நாமினேட் ஆனவர்கள் என கூறுகிறார் பிக்பாஸ். பிக்பாஸ் சொன்ன காரணங்களை கேட்டு கைத்தட்டி சிரிக்கின்றனர் ஹவுஸ்மெட்ஸ்.

பாலாஜி டென்ஷன்
ஆனால் பாலாஜி மட்டும் செம டென்ஷன் ஆகிறார். தொடர்ந்து பேசும் பாலா, எப்பா.. கேட்டுக்குங்கப்பா.. இங்க காதல்லாம் எவனும் பணணல.. அப்படி எதாவது நினைப்பு இருந்து.. என் காதுல கேட்டுச்சுன்னா, நான் ஏதாவது கேட்பேன்.. என கோபமாக பேசுகிறார்.

ஷாக்காகும் ஷிவானி
தொடர்ந்து பெட்ரூமில் இருக்கும் ஷிவானியுடன் பேசும் பாலாஜி, சப்போஸ் லவ் வந்துச்சுன்னா நான் உன்கிட்ட சொல்றேன் ஓகேவா.. வராது.. வந்துச்சுன்னா சொல்றேன் என்று கூறியப்படியே வெளியே செல்கிறார். பாலாஜி இப்படி சொல்வதை கேட்டு ஷிவானி ஷாக்காவதாக உள்ளது புரமோ.


Click it and Unblock the Notifications











