பிக்பாஸ் சீசன் 2 எப்போ ஆரம்பமாகுது தெரியுமா? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Recommended Video

சென்னை : கடந்த வருடம் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி விஜய் டிவி-யின் பிக்பாஸ்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைத் தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம்.
பல சர்ச்சைகளைச் சந்தித்து ஒரு வழியாக முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.

பிக்பாஸ் மூலம் பிரபலம்
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து, ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிரபலமடைந்ததோடு, பட வாய்ப்புகளும் குவிந்தன.

சீசன் 2
சீசன் 1 முடிந்தபிறகு மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளது எனக் கூறப்பட்டது. இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்தனர். சீசன் 2 தொடர்பான தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது.

ஜூன் மாதம் தொடக்கம்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 2 குறித்த அறிவிப்பை விரைவில் பிக்பாஸ் தயாரிப்புக் குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பாளர் யார்?
முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது அரசியல் என்ட்ரி தொடர்பாக பிஸியாக இருக்கிறார். அதனால் அவர் தொகுத்து வழங்க நிச்சயம் வாய்ப்பில்லை. நடிகர் அரவிந்த் சாமி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











