Just In
- 1 hr ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 1 hr ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 2 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 2 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னை ஏன் வெளியே அனுப்பினாங்கன்னே தெரியல.. பாலாஜி பத்தி நான் என்ன சொல்றது.. பிக்பாஸ் பிரபலம் அதிரடி!
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சரவணன், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
50 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கி வருபவர் பாலாஜி முருகதாஸ்.
ஹீரோயினான குட்டி நயன்.. பிறந்தநாளில் ஃபிரண்ட்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. தீயாய் பரவும் வீடியோ!

அட்ஜெஸ்ட்மெண்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசினார். சனம் ஷெட்டி மிஸ் சவுத் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றதை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் பெற்றார் என இழிவாக பேசினார்.

வெளிப்பட்ட வில்லங்கம்
இந்த விஷயத்தை விஜய் டிவி ஒளிபரப்பாத நிலையில் அதன் பிறகு ஒளிபரப்பான எபிசோடுகளில் கோர்ட் டாஸ்க்கின் போது இந்த விவகாரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலாஜியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

அவளே இவளே என..
தொடர்ந்து சனம் ஷெட்டியை தறுதலை தறுதலை என்றழைத்த பாலாஜி முருகதாஸ், அவரை அவளே இவளே என்று தரக்குறைவாக பேசினார். மேலும் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் பீஜன்ட் என்றும் கூறினார்.

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு
பாலாஜி தொடர்ந்து சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசியதை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே தங்களின் அழகிப்போட்டியை டுபாக்கூர் ஆழகிப் போட்டி என்று கூறியதற்காக அதன் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பாலாஜியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.

எதையாவது நீட்டி பேசுவேன்
பெண் போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆண் போட்டியாளர்களிடமும் வம்பிழுத்து வருகிறார். ஆரியிடம் வேற எதையாது நீட்டி பேசுவேன் என்று கூறியதோ காலையும் நீட்டி பேசினார். அவரது நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முத்தம் கொடுத்த பாலாஜி
மேலும் ஷிவானியை தனது ஃபிரண்ட் என கூறி வரும் பாலாஜி, அவரை தடவுவது, இடுப்பில் கை வைப்பது, மாசாஜ் செய்ய சொல்வது, ஊட்டி விட சொல்வது என அவரிடம் எல்லை மீறி வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் ஷிவானிக்கு பிக்பாஸ் வீட்டில் முத்தம் கொடுத்தார் என்று ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.

சரவணன் வெளியேற்றம்
இந்நிலையில் கடந்த சீசனில் சிறுவயதில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்ததாக கூறிய சரவணன், அதற்காக மன்னிப்பு கேட்ட போதும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். பெரும் குற்றவாளியை போல் அவரை கன்ஃபெஷன் ரூமில் இருந்தப்படியே கண்களை கட்டி அழைத்து சென்றனர்.

எனக்கே தெரியவில்லை
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் சரவணன்.
அப்போது பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் பாலாஜியை ஏன் வெளியேற்றவில்லை என சரவணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள சரவணன் என்னை எதற்காக வெளியில் அனுப்பினார்கள் என்பது எனக்கே தெரியாது என கூறியுள்ளார்.

பதில் சொல் வேண்டும்
மேலும், நீங்கள் தற்போது பாலாஜி பற்றி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டீமும் கமல் சாரும் தான் பதில் அளிக்க வேண்டும் சரவணன் கூறியுள்ளார். இளமை பருவத்தில் செய்த தவறை இப்போது சொன்னதற்காக சரவணன் மீது நடவடிக்கை எடுத்த பிக்பாஸ் குழு இப்போது தவறு செய்யும் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.