பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவின் தந்தை திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகென் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் திடீரென மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பங்கேற்றவர் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவ்.
இலங்கை தமிழரான இவர் மலேசியாவில் செட்டிலாகியுள்ளார். பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடல் என பல முகங்களை கொண்டவர் முகென் ராவ்.

டைட்டில் வின்னர்
பிக்பாஸ் வீட்டில் சத்தியமா நா சொல்லுறன்டி என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் முகென் ராவ்.

தோளில் தூக்கி
பிக்பாஸ் வீட்டில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய முகென் ராவ், தனது அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சண்டை போடுவார்கள் என்று உருக்கமாக கூறியிருந்தார். அன்பு மட்டுமே அநாதை என்றும் கூறி கலங்க வைத்தார் முகென் ராவ். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது தாயையும் தங்கையையும் தோளில் தூக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார் முகென்.

திடீர் மரணம்
இதனை தொடர்ந்து முகெனின் அப்பாவும் வீடியோ காலில் வந்து மகனுக்கு ஆறுதல் கூறி அன்பாக பேசினார். இதனால் ஆனந்த கண்ணீர்விட்டார் முகென். இந்நிலையில் முகெனின் தந்தை பிரகாஷ் ராவ் திடீரென காலமாகியுள்ளார். 52 வயதான பிரகாஷ் ராவ், திடீர் கார்டியாக் அரஸ்ட்டால் மரணமடைந்திருக்கிறார்.
டிவிட்டரில் இரங்கல்
பிரகாஷ் ராவின் இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராவின் திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேடை பாடகரான பிரகாஷ் ராவின் மறைவு செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும் முகென் ராவின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிவிட்டரில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











